For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேகிக்கு ராணுவத்திலும் "ரெட்"... சாப்பிடவும், கேன்டீனில் விற்கவும் தடை!

Google Oneindia Tamil News

டெல்லி: நெஸ்லேவின் மேகிக்கு இப்போது ராணுவத்திலும் எதிர்ப்பு வந்துள்ளது. ராணுவ கேன்டீன்களில் மேகியை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ராணுவத்தில் யாரும் மேகியை சாப்பிடக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும் ராணுவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maggi gets red in Army, pulls out of canteens

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நெஸ்லே நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தயாரிக்கும் மேகியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரீயம், அளவுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல மாநிலங்களில் மேகிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகமும் தடை விதிப்பது குறித்த பரிசீலனை செய்து வருகிறது.

இந்த நிலையில் மேகிக்கு ராணுவத்தில் தடை வந்துள்ளது. இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள், வீரர்கள், கேன்டீன்களுக்கு ஒரு உத்தரவை அனுப்பியுள்ளது. அதில், ராணுவத்தில் யாரும் மேகியைப் பயன்படுத்த வேண்டாம். கேன்டீன்களிலும் மேகி விற்பனை கூடாது. தற்போது உள்ள ஸ்டாக்குகளையும் விற்பனையிலிருந்து திரும்பப் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 35 துறை அளவிலான ராணுவ கேன்டீன்களும், 3600 யூனிட் வாரியான ராணுவ கேன்டீன்களும் உள்லன. மொத்தம் 25 லட்சம் ஓய்வு பெற்ற ராணுவத்தினர் மற்றும், 13 லட்சம் பணியில் உள்ள ராணுவத்தினர் இதனால் பலனடைந்து வருகின்றனர்.

மறு உத்தரவு வரும் வரை மேகியை பர்ச்சேஸ் செய்ய வேண்டாம் என்றும் ராணுவ கேன்டீன்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். நாடு முழுவதும் உள்ள ராணுவ கேன்டீன்களில் பலவேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு ஆண்டுக்கு ரூ. 10,000 கோடி அளவுக்கு வியாபாரம் நடப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Army has banned Maggi from its canteens and has ordered its officials and soldiers not to use Maggi till further orders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X