For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேற்கு வங்கத்தில் 'நேதாஜி பட்டாலியன்' போலீஸ் படை... மம்தா பானர்ஜி அசத்தல் அறிவிப்பு!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: கொல்கத்தா போலீஸ் படையில் 'நேதாஜி பட்டாலியன்' படை பிரிவு புதிதாக உருவாக்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சட்டசபையில் அறிவித்தார்.

ரூ.2,99,688 கோடி மதிப்பில் பட்ஜெட்டை தாக்கல் செய்த மம்தா பானர்ஜி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

மம்தா பானர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களை எழுப்பி சபையிலிருந்து வெளியேறினர்.

பாஜகவின் தீராத ஆசை

பாஜகவின் தீராத ஆசை

மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. அங்கு ஆட்சியை தக்க வைக்க திரிணாமுல் காங்கிரஸ் முயன்று வருகிறது. எப்படியவாது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜக துடித்து வருகிறது.

அடுத்தடுத்து விலகல்

அடுத்தடுத்து விலகல்

இந்த நிலையில் மேற்கு வங்க சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதன் முதலாக கவர்னர் உரையின்றி சட்டசபை பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. மாநில நிதி மந்திரி அமித் மித்ரா உடல்நல பிரச்சினைகள் காரணமாக கலந்து கொள்ளவில்லை. இதனால் முதல்வர் மம்தா பானர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

மம்தா பானர்ஜி பட்ஜெட் தாக்கல்

மம்தா பானர்ஜி பட்ஜெட் தாக்கல்

இந்த நிலையில் மேற்கு வங்க சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதன் முதலாக கவர்னர் உரையின்றி சட்டசபை படஜெட் கூட்டம் நடைபெற்றது. மாநில நிதி மந்திரி அமித் மித்ரா உடல்நல பிரசினைகள் காரணமாக கலந்து கொள்ளவில்லை. இதனால் முதல்வர் மம்தா பானர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

நேதாஜி பட்டாலியன் படை

நேதாஜி பட்டாலியன் படை

ரூ.2,99,688 கோடி மதிப்பில் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். கொல்கத்தா போலீஸ் படையில் 'நேதாஜி பட்டாலியன்' படை பிரிவு புதிதாக உருவாக்கப்படும் என்று மம்தா பானர்ஜி அறிவித்தார். ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் போக்குவரத்து வாகனங்களுக்கும் சாலை வரி தள்ளுபடி செய்வதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

பாஜக வெளிநடப்பு

பாஜக வெளிநடப்பு

மேலும் துர்காபூரில் உள்ள ஆண்டல் விமான நிலையம் சர்வதேச விமானமாக அபிவிருத்தி செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை மம்தா பானர்ஜி வெளியிட்டார். மம்தா பானர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களை எழுப்பி சபையிலிருந்து வெளியேறினர். ''இது மிகவும் சோகமான சம்பவம். இதை நான் கண்டிக்கிறேன்'' என்று மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்தார்.

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee has announced in the Assembly that a new 'Netaji Battalion' unit of the Kolkata Police Force will be formed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X