அந்த விஷயத்திற்கு தொடர்ந்து நச்சரித்த காதலி! நோ சொன்ன பிறகும் விடவில்லை! 49 முறை குத்தி கொன்ற இளைஞன்

Subscribe to Oneindia Tamil

புபனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் உருகி உருகிக் காதலித்த பெண்ணையே, கொடூரன் ஒருவன் 49 முறை கொடூரமாகக் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாகக் காதல் விவகாரங்களில் பெண்கள் மீதான குற்றச் சம்பவங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், இதுபோன்ற கொடூர சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறியே வருகிறது.

 கொடூரம்

கொடூரம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒரு தலை காதல் விவகாரத்தில் நடந்த படுகொலை அனைவருக்கும் ஞாபகம் இருக்கலாம். சத்யா என்ற பெண்ணை ஒரு தலையாகக் காதலித்த சதீஷ் என்ற இளைஞர், பரங்கிமலையில் ரயில் நிலையத்தில் வைத்து சத்யாவை ரயில் தள்ளி படுகொலை செய்தார். அங்கிருந்த சத்யா தோழிகள் சுதாரிப்பதற்குள் அத்தனையும் நடந்து முடிந்துவிட்டது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் சத்யாவின் தாயாரும் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காதல்

காதல்

இதற்கிடையே காதல் காரணமாக மற்றொரு கொடூர கொலை சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உருகி உருகிக் காதலித்த பெண்ணை, அவரது காதலனே கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அதுவும் 49 முறை தனது ஆத்திரம் தீரக் குத்தி கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. அங்கு வசிக்கும் ஜகன்னாத் கோதா என்ற இளைஞர் குனிதர் சீமாதாஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணும் இவரைக் காதலித்து வந்ததாகவே தெரிகிறது.

 திருமணம்

திருமணம்

இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தனது காதலனிடம் சீமாதாஸ் கேட்டுள்ளார். இருப்பினும், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள அந்த இளைஞர் மறுத்ததாகத் தெரிகிறது. கொஞ்சக் காலம் போக்கட்டும் அதன் பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்றே அந்த ஆண் தெரிவித்துள்ளார். எப்போது திருமணம் குறித்துப் பேசினாலும், எப்படியாவது பேச்சை வேறு விஷயத்திற்கு அந்த ஆண் மாற்றிவிடுவாராம்.

 நச்சரித்த காதலி

நச்சரித்த காதலி

அந்த இளைஞர் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிடுகிறார் என்றும் இதனாலேயே தன்னை திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கவில்லை என்றும் சீமாதாஸ் சந்தேகப்பட்டுள்ளார் இதன் காரணமாகவே விடாமல் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலனிடம் கேட்டிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் தனது காதலி குனிதர் சீமாதாஸைக் கொல்லத் திட்டமிட்ட ஜகன்னாத் கோதா, அவரை தன்னுடன் குஜராத்தின் சூரத்துக்கு வரச் சொன்னார். காதலனை நம்பி அந்தப் பெண்ணும் சூரத் நகருக்கு அவருடன் சென்றுள்ளார்.

 கொடூர கொலை

கொடூர கொலை

நகரத்தைச் சுற்றிப் பார்க்கப் போகலாம் என்று கூறி காதலியை அழைத்துச் சென்ற அந்த இளைஞர், அங்குக் கொலை செய்ய பக்காவாக பிளான் போட்டு வைத்திருந்தார். திட்டமிட்டிருந்த இடத்தை அடைந்ததும், அந்தப் பெண்ணை 49 முறை ஆத்திரம் தீரக் குத்தி கொலை செய்துள்ளார் அந்த இளைஞர்..! புவனேஸ்வருக்கு திரும்பும் முன், காதலியின் உடலை யாருமே இல்லாத ஒரு வயல்வெளியிலும் தூக்கி எறிந்துள்ளார்.. அடையாளம் தெரியாத பெண்ணின் இடல் இருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சூரத் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்

கைது

கைது

பெண்ணின் உடலில் இருந்த டி-சர்ட்டை வைத்துத் தான் போலீசார் முதலில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை வைத்து ஆய்வு செய்த போலீசார், பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில் நிலையங்களில் விசாரணை நடத்தினர். அப்போது தான், உயிரிழந்தவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவரது காதலனே, அந்தப் பெண்ணை கொடூரமாகக் கொலை செய்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+