For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கன்யா குமாரின் தலைக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவித்த ஆதர்ஷ் சர்மா கைது !

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்யா குமாரை கொலை செய்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவித்த பூர்வாஞ்சல் சேனா தலைவர் ஆதர்ஷ் சர்மாவை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்யா குமாரை கொலை செய்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசாக அளிக்கப்படும் என பூர்வாஞ்சல் சேனா தலைவர் ஆதர்ஷ் சர்மா அறிவித்தார்.

Man who offered Rs 11 lakh to kill Kanhaiya has Rs 150 in bank

பீகார் மாநிலம் பெகுசாராய் பகுதியை சேர்ந்த சர்மாவின் வங்கி கணக்கில் வெறும் ரூ.150 தான் உள்ளது. டெல்லி ரோஹினி பகுதியில் வசிக்கும் அவர் பல மாதங்களாக வாடகை அளிக்காமல் உள்ளார்.

கன்யா குமாரை கொலை செய்பவருக்கு பூர்வாஞ்சல் சேனா ரூ.11 லட்சம் வழங்கும் என்று நாடாளுமன்றம் அருகே உள்ள கட்டிடங்களில் இந்தி மொழியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இதையடுத்து சர்மா தலைமறைவாகி இருந்தனர். இந்நிலையில் டெல்லி போலீசார் அவரை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Adarsh Sharma who offered to give Rs. 11 lakh to those who kill JNU student Kanhaiya Kumar has only Rs. 150 in his bank account.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X