மணிப்பூர் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 2022: பாஜக அமோக வெற்றி - பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது
மணிப்பூரில் பெரும்பான்மைக்கு தேவையான 31 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 7 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. இதர கட்சிகள் 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது
இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாகா மக்கள் முன்னணி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. என்பிஎஃப் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதர கட்சியினர் 11 இடங்களில் வென்றுள்ளனர்.
Recommended Video
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. நடந்து முடிந்துள்ள தேர்தலில் மீண்டும் பாஜக தான் ஆட்சிக்கு வரும் என கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. பாஜக தலைமையும் தொண்டர்களும் அதீத நம்பிக்கையோடு சட்டசபைத் தேர்தல் முடிவுகளைக் காண காத்திருக்கின்றனர்.
மணிப்பூர் மாநிலத்தில் 60 சட்டசபைத் தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 28, மார்ச் 5ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டமாக இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் 5 பெண்கள் உள்பட மொத்தம் 173 வேட்பாளர்கள் களமிறங்கினர். இரண்டாம் கட்டமாக ஆறு மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 2 பெண்கள் உள்பட மொத்தம் 92 வேட்பாளர்கள் களமிறங்கினர். இன்று காலை முதலே வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கருத்துக்கணிப்புகள்
மணிப்பூர் மாநிலத்துக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக 33-43 இடங்களும், காங்கிரஸ் கட்சி 4-8 இடங்களும், என்.பி.பி- 4-8 இடங்களும், மற்ற கட்சிகள் 06-15 இடங்களையும் பிடிக்கும் என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஜீ நியூஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக 32 முதல் 38 இடங்களை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும், காங்கிரஸ் கூட்டணி 12 முதல் 17 இடங்களை பெறும் என நடத்திய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

2017 நிலவரம்
பாஜக கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 60 இடங்களில் 21 இடங்கள் தான் பெற்றிருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி 28 இடங்களைப் பெற்றிருந்தது. காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும் என்று எண்ணிய நிலையில் நாகா, மக்கள் கட்சிகளோடு தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்து மணிப்பூரில் ஆட்சியைப் பிடித்தது பாஜக. இந்த முறை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவிற்கு சாதகமாக உள்ளதால் ஆட்சியை தக்கவைக்கும் அதீத நம்பிக்கையில் பாஜகவினர் உள்ளனர்.

பெரும்பான்மை
மணிப்பூர் மாநிலத்தில் மணிப்பூர் மாநிலத்தில் பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாகா மக்கள் முன்னணி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. என்பிஎஃப் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதர கட்சியினர் 11 இடங்களில் வென்றுள்ளனர்.

தனித்து போட்டியிட்ட பாஜக
மணிப்பூரில் கடந்த 2017 சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளின் தயவோடு ஆட்சி அமைத்தது. அங்கு இருக்கும் நாகா பீப்பிள் ப்ரோண்ட், நேஷனல் பீப்பிள் பார்ட்டி ஆகிய கட்சிகளின் உதவியோடு பாஜக அங்கு ஆட்சி அமைத்தது. இம்முறை கூட்டணிக்கட்சிகளை கழற்றி விட்டு இந்த முறை பாஜக அங்கு தனியாக போட்டியிட்டது.

காங்கிரஸ் கூட்டணி
மாறாக காங்கிரஸ் 6 கட்சிகளின் கூட்டணியை உருவாக்கி போட்டியிட்டாலும் பெரிய அளவில் வெற்றிபெற முடியவில்லை. இடதுசாரிகள் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. சிபிஐ, சிபிஎம், ரெவலூஷனிரி சோஷலிஸ்ட் பார்ட்டி, பார்வேர்ட் பிளாக், மத சார்பாற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ் வெறும் 4 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இது கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது படுதோல்வியாகும்.

ஆட்சியை தக்கவைக்கும் பாஜக
மணிப்பூர் மாநிலத்தில் இந்த முறை பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கணிப்புகள் கூறியது அது போலவே தனித்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications