மேகாலயா உள்துறை அமைச்சர் லக்மென் ரிம்புய் ராஜினாமா.. வன்முறையால் ஷில்லாங்கில் ஊரடங்கு
ஷில்லாங்: முன்னாள் கிளர்ச்சித் தலைவரின் மரணத்திற்கு எதிராக மாநிலம் முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால், மேகாலயா உள்துறை அமைச்சர் லக்மென் ரிம்புய் ராஜினாமா செய்தார்.
இதனிடையே வன்முறையை கட்டுப்படுத்த இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 மாவட்டங்களில் நிலைமை மோசமாகி உள்ளதால் அங்கு இணையதள சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

போலீசார் அண்மையில் நடத்திய சோதனையின் போது முன்னாள் கிளர்ச்சி குழு தலைவர் செரிஷ்ஸ்டார்ஃபீல்ட் தாங்கீவ் அவரது இல்லத்தில் கொல்லப்பட்டார். இதனால் மேகாலாயா மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. தலைநகர் ஷில்லாங்கில் சுதந்திர தினமான இன்று கடும் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டது. இதையடுத்து மேகாலயா உள்துறை அமைச்சர் லக்மென் ரிம்புய் ராஜினாமா செய்தார்
மேலும் ரிம்புய் இந்த விவகாரத்தில் நீதி விசாரணைக்கு முன்மொழிந்தார், மேலும் முதல்வருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். "உள்துறை (காவல்துறை) துறையை உடனடியாக என்னிடமிருந்து விடுவிக்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இது உண்மையை வெளிக்கொணர அரசாங்கம் எடுத்த சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைக்கு உதவும்" என்றார்
இதனிடையே முன்னாள் கிளர்ச்சி குழு தலைவர் செரிஷ்ஸ்டார்ஃபீல்ட் தாங்கீவ்வின் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கருப்பு உடையில் மற்றும் கொடி கொடி ஏந்தி பங்கேற்றனர். இதை காவல்துறை நடத்திய படுகொலை என்றே பலர் குற்றம்சாட்டுகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications