For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'வந்தே பாரத்' ரயில் மீது பயங்கர கல்வீச்சு.. "ஜெய் ஸ்ரீராம்" கோஷம் காரணமா? பரபரக்கும் மேற்கு வங்கம்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநித்தில் ஹவுராவை நோக்கி சென்ற 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் மீது நேற்று மர்ம நபர்கள் பயங்கர கல்வீச்சில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள், வெளிப்புறப் பகுதிகள் ஆகியவை பலத்த சேதமடைந்தன. இந்த நிகழ்வு பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுல்ளது.

இந்த ரயில் தொடக்க விழா நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் பங்கேற்ற போது, அங்கிருந்த சிலர் "ஜெய் ஸ்ரீராம்" கோஷம் எழுப்பினர். இதில் அப்செட் ஆன மம்தா பானர்ஜி, மேடையில் ஏற மறுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். எனவே, இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

வந்தே பாரத் ரயில் துவக்க விழாவில் டென்ஷனான மம்தா.. மேடையேற மறுத்ததால் பரபரப்பு.. என்னாச்சு? வந்தே பாரத் ரயில் துவக்க விழாவில் டென்ஷனான மம்தா.. மேடையேற மறுத்ததால் பரபரப்பு.. என்னாச்சு?

தொடங்கி வைத்த மோடி

தொடங்கி வைத்த மோடி

பிரதமர் நரேந்திர மோடியன் தாயார் ஹீராபென் மோடி கடந்த 30-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற மோடி, பின்னர் காணொலி வாயிலாக மேற்கு வங்கத்தில் 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். ஹவுராவில் இருந்து நியூ ஜல்பாய்குரி வரை இந்த எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும். இந்த ரயில் சேவை மேற்கு வங்க மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மம்தாவை 'டென்ஷன்' ஆக்கிய கோஷம்

மம்தாவை 'டென்ஷன்' ஆக்கிய கோஷம்

இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் அழைப்பின் பேரில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர், மம்தா பானர்ஜி மேடை ஏறும்போது "ஜெய் ஸ்ரீராம்" கோஷம் எழுப்பினர். பாஜக ஆதரவு கோஷமாக "ஜெய்ஸ்ரீ ராம்" கருதப்படுவதால் மம்தா பானர்ஜி கடும் அதிருப்தி அடைந்தார். பின்னர், மேடையில் ஏற மறுத்த அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

பயங்கர கல்வீச்சு

பயங்கர கல்வீச்சு

இந்நிலையில், நேற்று மதியம் ஜல்பாய்குரியில் இருந்து ஹவுரா நோக்கி 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது மாலை 5.50 மணியளவில் குமார்கஞ்ச் ரயில் நிலையத்தை கடந்த போது, வந்தே பாரத் ரயில் மீது நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பயங்கர கல்வீச்சில் ஈடுபட்டனர். பெரிய செங்கல்கள், கருங்கற்கள் ரயில் மீது வீசப்பட்டன. இதனால் அச்சத்தில் பயணிகள் அலறினர். சுமார் 10 நிமிடங்கள் இந்த கல்வீச்சு நீடித்தது. இதில், ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. ரயிலின் வெளிப்புறங்களும் பலத்த சேதம் அடைந்தன. எனினும், நல்வாய்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

திரிணமூல் தொண்டர்களா?

திரிணமூல் தொண்டர்களா?

இந்த கல்வீச்சு சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், "ஜெய் ஸ்ரீராம்" கோஷம் எழுப்பி மம்தா பானர்ஜியை அதிருப்தி அடையச் செய்ததால் ஆத்திரத்தில் இருந்த திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களே இந்த செயலில் ஈடுபட்டிருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கு திரிணமூல் காங்கிரஸ் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

English summary
Miscreants pelted stones on the 'Vande Bharat' Express train which was heading towards Howrah in West Bengal. BJP accused Trinamool Congress workers as they irritated by jai shriram chant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X