For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அருணாச்சல பிரதேசத்தில் காணாமல் போன இளைஞர்- சீன ராணுவம் கண்டுபிடித்ததாக தகவல்

Google Oneindia Tamil News

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் காணாமல் போன இளைஞர், சீன ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தூத்துக்குடி கோயில் பெண்கள் குளியலறையில் 3 ரகசிய கேமராக்கள்.. கைவிரிக்கும் கோயில் நிர்வாகம்! தூத்துக்குடி கோயில் பெண்கள் குளியலறையில் 3 ரகசிய கேமராக்கள்.. கைவிரிக்கும் கோயில் நிர்வாகம்!

அருணாச்சல பிரதேசத்தின் Lungta Jor பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் Miram Taron ஜனவரி 18-ந் தேதி காணாமல் போனார். அருணாச்சல பிரதேச எம்.பி. தபீர் காவோ, சீன ராணுவம்தான் அந்த இளைஞரை கடத்தியதாக குற்றம்சாட்டினார்.

சீனா கடத்தியதாக தகவல்

சீனா கடத்தியதாக தகவல்

இது தொடர்பாக ட்விட்டரில் தபீர் காவோ பதிவிட்டிருந்ததாவது: 17 வயது இளைஞரை சீன ராணுவம் கடத்திச் சென்றுள்ளது. இந்தியப் பகுதிக்குள் நுழைந்து சீன ராணுவம் அந்த இளைஞரை கடத்திச் சென்றுள்ளது. 2018-ல் இந்திய நிலப்பகுதிக்குள் சுமார் 3 முதல் 4 கி.மீ. தொலைவு சாலை அமைத்துள்ளது சீனா. இவ்வாறு தபீர் காவோ பதிவிட்டிருந்தார். மேலும் அந்த இளைஞர் Tsangpo ஆறு இந்தியாவுக்குள் நுழையும் இடத்தில் கடத்தப்பட்டுள்ளார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய அரசு மீது விமர்சனம்

மத்திய அரசு மீது விமர்சனம்

இதனைத் தொடர்ந்து சீன ராணுவத்தை இந்திய ராணுவத் தரப்பில் தொடர்பு கொள்ளப்பட்டது. காணாமல் போன இளைஞரை கண்டுபிடித்து தருமாறும் இந்திய ராணுவம் கேட்டுக் கொண்டது. இந்திய நிலப்பகுதிக்குள் நுழைந்து சீனா இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாக கூறப்பட்ட சம்பவம் அரசியல் ரீதியாகவும் மத்திய அரசு மீது விமர்சனங்களை எழுப்பிவிட்டது.

அருணாச்சச்ல பிரதேசமும் சீனாவும்

அருணாச்சச்ல பிரதேசமும் சீனாவும்

அருணாச்சலப் பிரதேசத்தை ஏற்கனவே தங்களது நாட்டின் ஒரு பகுதி என்கிறது சீனா. அருணாச்சல பிரதேசத்தின் அதிகாப்பூர்வ பெயர்களை சீனா திடீரென மாற்றியிருந்தது. திபெத்தின் ஒரு பகுதியே அருணாச்சல பிரதேசம் என்பது சீனாவின் நிலைப்பாடு. ஆனால் இதனை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்பதில் நமது அரசு திட்டவட்டமாக உள்ளது.

கண்டுபிடித்த சீனா

கண்டுபிடித்த சீனா

இந்நிலையில் காணாமல் போன இளைஞரை சீன ராணுவம் கண்டுபிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக தேஸ்பூர் ராணுவ அதிகாரி ஹர்ஷ்வர்தன் பாண்டே கூறுகையில், சீன ராணுவம் நம்மை தொடர்பு கொண்டு காணாமல் போனதாக கூறப்படும் இளைஞரை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்துள்ளது. உரிய நடைமுறைகளின் படி இந்தியாவின் அந்த இளைஞரை ஒப்படைக்க உள்ளதாகவும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
A missing 17 year old Arunachal Pradesh Youth found by China's Army PLA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X