பைசா செலவில்லாமல் மங்கள்யானுடன் "செல்ஃபி" எடுக்க ஆசையா?
ஹைதராபாத்: இந்திய விண்வெளி அறிவியலில் புதிய சாதனையப் படைக்கவுள்ள மங்கள்யான் விண்கலத்துடன் நாம் இருப்பது போன்ற செல்ஃபி படத்தை எடுக்கும் ஒரு அரிய வாய்ப்பை ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்மார்ட்டர் (Smartur) என்ற நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இதற்காக அது ஒரு அப்ளிகேஷனை (ஆப்) ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாம் மங்கள்யானுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை எடுத்துக் கொள்ள முடியும். ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் மொபைல் போன்களில் இந்த செல்ஃபி படத்தை எடுத்துக் கொள்ள முடியுமாம்.
மங்கள்யான் விண்கலம் செப்டம்பர் 24ம் தேதி புதன்கிழமையன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குள் நுழையவுள்ளது. ஒட்டுமொத்த இந்தியர்களும் இந்த அரிய சாதனை நாளை எதிர்நோக்கிக் காத்துள்ளனர்.
இந்த நிலையில்தான் இப்படி ஒரு செல்ஃபி வாய்ப்பை ஹைதராபாத் நிறுவனம் வழங்கியுள்ளது.
3டி மங்கள்யான்...
3டி மாடலில் மங்கள்யானுடன் நிஜமாகவே நாம் சேர்ந்து இருப்பதைப் போல இதில் புகைப்படம் எடுக்க முடியும். அதாவது நிஜமான மங்கள்யானுடன் இருப்பது போலவே இந்தப் புகைப்படம் இருக்குமாம்.
வித்தியாசமான புகைப்படங்கள்...
இதுதவிர விதம் விதமான வித்தியாசமான புகைப்படங்களையும் நாம் எடுத்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளதாம்.
நம்ம ஐடியாவும் கூட...
மேலும் நமக்கு மனதில் தோன்றும் வினோதமான, வித்தியாசமான யோசனைகளையும் கூட இணைத்து அப்படிப்பட்ட செல்ஃபி படங்களையும் எடுக்கும் வாய்ப்பையும் இந்த ஆப் நமக்குத் தருகிறதாம்.
இலவச டவுன்லோட்...
இதற்கு நாம் செய்ய வேண்டியது, இந்த அப்ளிகேஷனை முதலில் நமது செல்போனில் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் செய்ய வேண்டியை அந்த அப்ளிகேஷனே நமக்கு எளிதாக விளக்குமாம்.


Click it and Unblock the Notifications
