2014-15 பட்ஜெட்: ஜூலை 8ல் ரயில்வே, 10ல் பொது பட்ஜெட் தாக்கல்!
டெல்லி: 2014-15ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் ஜூலை 8ஆம் தேதியும், பொது பட்ஜெட் ஜூலை 10ஆம் தேதியும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவை குழு அறிவித்துள்ளது.
புதிய அரசு பதவியேற்ற பிறகு 16-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற்றது.

குடியரசுத்தலைவர் உரை
புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர்
இந்நிலையில் கடந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ரயில்வே பட்ஜெட் மற்றும் இடைக்கால பொது பட்ஜெட் ஆயுட்காலம் முடிவடையவுள்ளதை அடுத்து பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது.

பட்ஜெட் தாக்கல்
2014- 15-ம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட் ஜூலை 8-ம் தேதியும், பொது பட்ஜெட் ஜூலை 10-ம் தேதியும் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கை
9-ம் தேதியன்று பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு மசோதா, டிராய் சீர்திருத்த மசோதா, செபி மசோதா ஆகியனவற்றை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

எதிர்கட்சிகள் தயார்
இதற்கிடையில், ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னரே, ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் என தெரிகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications