நாகாலாந்து தனிநாடு கோரும் மூய்வா அமைப்புடன் மத்திய அரசு சமாதான உடன்படிக்கை
டெல்லி: நாகாலிம் என்ற பெயரில் அகன்ற நாகாலாந்து தனிநாடு கோரி போராடி வரும் இசாக்- மூய்வா தலைமையிலான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்புடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. டெல்லியில் பிரதமர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
தனிநாடு கேட்டு நாகலாந்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஆயுதம் தாங்கிய குழுக்கள் போராடி வருகின்றன. இதனால் கிளர்ச்சி குழுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்ட மோதலால் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு அவ்வப்போது கிளர்ச்சி அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்து வருகின்றன. இதேபோல் டெல்லியில் பிரதமர் இல்லத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இசாக்-மூய்வா தலைமையிலான தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்புடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த உடன்படிக்கை பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் இது. இந்த ஒப்பந்தம் நிறைவேற உதவியவர்களுக்கு நன்றி. 60 ஆண்டு கால அரசியல் பிரச்சினைக்கு ஒப்பந்தம் மூலம் தீர்வு ஏற்பட்டுள்ளது.

நாகலாந்தில் அமைதி நிலவ இந்த ஒப்பந்தம் உதவும். நாகலாந்தில் அரசியல் ரீதியாக சண்டை காரணமாக ஏராளமானோர் இறந்துள்ளனர். எதிர்பாரத விதமாக நாகலாந்து பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இதற்கு காரணம் பிரிட்டிஷ் ஆட்சி. நான் பொறுப்பெற்ற பிறகு தனிக்கவனம் செலுத்தி இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றார்.
Today, we mark not merely the end of a problem but the beginning of a new future. #Nagaland http://t.co/23SUObuL4T pic.twitter.com/35x4ih8qQN
— Narendra Modi (@narendramodi) August 3, 2015 பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், ராணுவ தளபதி பிக்ராம் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications