இவ்வளவு ஃபேக் ஐடிக்களா?.. உலகிலேயே மோடிக்குத்தான் டிவிட்டரில் அதிக பொய்யான பின்தொடர்பாளர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகிலேயே பிரதமர் மோடிக்குத்தான் டிவிட்டரில் அதிக பொய்யான பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

'டிவிப்லோமசி' என்ற அமைப்பு டிவிட்டரில் உலக தலைவர்கள் பிரபலங்களுக்கு இருக்கும் பின்தொடர்பாளர்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தி இருக்கிறது. அவர்களின் பின்தொடர்பாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சோதனை செய்து உள்ளது.

அதை வைத்து யாருக்கு எவ்வளவு பொய்யான தொடர்பாளர்கள் இருக்கிறார்கள் என்று உண்மை வெளியாகி இருக்கிறது. இதில் தமிழக பிரபலம் ஒருவரும் இருக்கிறார்.

மூன்றாவது

மூன்றாவது

போப் பிரான்சிஸ்தான் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். அவருக்கு மொத்தமாக 16.7 மில்லியன் பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். இதில் 59 சதவிகித பேர் போலியான பின்தொடர்பாளர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

டிரம்ப்

டிரம்ப்

கணக்குப்படி உலகிலேயே அமெரிக்க அதிபருக்குத்தான் இரண்டாவதாக அதிக பொய்யான டிவிட்டர் பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். 4,79,00,000 பேரில் 1.8 கோடி பொய்யான பின்தொடர்பாளர்கள் அவருக்கு இருக்கிறார்கள். சதவிகிதம்படி அவருக்கு 37 சதவிகித பொய்யான பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள்.

முதல்

முதல்

பிரதமர் மோடிக்கு 4,03,00,000 பேரில் 2,41,80,000 பொய்யான பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். உலகிலேயே சதவிகிதப்படி மோடிதான் முதல் இடத்தில் இருக்கிறார்கள். இவருக்கு மொத்தம் 60 சதவிகிதம் பேர் பொய்யான பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள்.

மற்ற பிரபலங்கள்

மற்ற பிரபலங்கள்

நடிகர் ரஜினிகாந்திற்கு இருக்கும் 45,80,000 பின் தொடர்பாளர்களில் 11,90,800 பொய்யானவர்கள். ராகுல் காந்திக்கு இருக்கும் 61,50,000 பின்தொடர்பாளர்களில் 42,43,500 பேர் பொய்யானவர்கள். பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு இருக்கும் 1,01,00,000 பின்தொடர்பாளர்களில் 67,67,000 பொய்யானவர்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Modi has the highest number of fake followers on Twitter. He has 2,41,80,000 fake followers out 4,03,00,000 followers.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற