For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமராக ராகுலைவிட நரேந்திர மோடிக்கு அதிக ஆதரவு: சி.என்.என்.-ஐபிஎன் கருத்து கணிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியைவிட பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமராக ஆதரவு அதிகம் இருப்பதாக சி.என்.என்.- ஐபிஎன் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இம்மாநில வாக்காளர்களிடம் சி.என்.என். - ஐபிஎன் தொலைக்காட்சி, யார் பிரதமராக ஆதரவு என்று கருத்து கணிப்பு நடத்தியது.

இக்கருத்து கணிப்பில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பிரதமராக 37% பேரும் ராகுல் காந்தி பிரதமராக 17% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சோனியா, மன்மோகனுக்கு 5% ஆதரவு

சோனியா, மன்மோகனுக்கு 5% ஆதரவு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் பிரதமராக தலா 5% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மாயாவதிக்கு 2% ஆதரவு

மாயாவதிக்கு 2% ஆதரவு

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, பிரதமராக 2% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அத்வானிக்கு 1% ஆதரவு

அத்வானிக்கு 1% ஆதரவு

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பிரதமராக 1% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் மோடிக்கு 42% ஆதரவு

டெல்லியில் மோடிக்கு 42% ஆதரவு

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் டெல்லி மாநிலத்தில் நரேந்திர மோடி பிரதமராவதற்கு 42% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் ராகுல் காந்தி பிரதமராக இம்மாநிலத்தில் 15% பேர் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானிலும் மோடிக்கு ஆதரவு

ராஜஸ்தானிலும் மோடிக்கு ஆதரவு

ராஜஸ்தான் மாநிலத்திலும் நரேந்திர மோடி பிரதமராவதற்கு 40% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 19% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

ம.பி.யில் கடும் போட்டி

ம.பி.யில் கடும் போட்டி

ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தில் மோடிக்கு 31% பேரும், ராகுல் காந்திக்கு 25% பேரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

சத்தீஸ்கரிலும் போட்டி

சத்தீஸ்கரிலும் போட்டி

இதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தில் மோடிக்கு 15% பேரும் ராகுல் காந்திக்கு 10% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நோட்டாவுக்கு 7% ஆதரவு

நோட்டாவுக்கு 7% ஆதரவு

அதே நேரத்தில் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என்பதற்காக நோட்டோ பட்டனை அழுத்தப் போவதாக 7% பேர் தெரிவித்திருக்கின்றனர்.

English summary
BJP's prime ministerial candidate Narendra Modi is much ahead of Congress vice-president Rahul Gandhi in the race for prime minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X