ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இப்போ பிரான்ஸ்... மோடியின் வெளிநாட்டு பயணங்கள் தொடருகிறது!
டெல்லி: பிரதமர் நரேந்திரமோடி முதல் முறையாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளிலேயே சுற்றித்திரிகிறார் மோடி என்று சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இப்போது பிரான்ஸ் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லூரன்ட் பேபியூஸ் விரைவில் இந்தியா வரவுள்ளார். அப்போது பிரதமர் உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்து இரு நாட்டு ஒத்துழைப்பு குறித்து பேசுகிறார். பின்னர் பிரான்ஸ் வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை பிரதமர் ஏற்று விரைவில் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப்பயணமாக பிரான்ஸ் வர உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. எனினும் மோடியின் பிரான்ஸ் பயணம் எப்போது எந்த மாதம் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
பிரதமர் நரேந்திரமோடி தனது முதல் பயணமாக பூடான் சென்றார். பிறகு, மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி, நேபாளம், பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் மோடி பல்வேறு அரசு முறை பயணங்களுக்காக சென்று வந்துள்ளார். எனவே 'வெளிநாடுவாழ் இந்திய பிரதமர்' என்று கிண்டலுக்கும் ஆளாகினார்.
இந்நிலையில் இப்போது ஐரோப்பிய நாடான பிரான்சுக்கும் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications