For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேகாலயாவில் தோற்றுப்போன போன மோடி மேஜிக்!

மேகாலயாவில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மேகாலயாவில் இம்முறையும் மண்ணை கவ்வுகிறது பாஜக!

    ஷில்லாங்: மேகாலயாவில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

    59 தொகுதிகளை கொண்ட மேகாலயா சட்டசபைக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 67 சதவீத வாக்குகள் பதிவானது.

    இதனை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதில் காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

    பாஜக கனவு

    பாஜக கனவு

    மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் இம்முறையாவது ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற முனைப்பில் இருந்தது பாஜக.

    தீயாக வேலைபார்த்த காங்.

    தீயாக வேலைபார்த்த காங்.

    இதற்காக பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்களும் மேகாலயாவில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியும் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தீயாக வேலை பார்த்தது.

    பாஜக ஆட்சி

    பாஜக ஆட்சி

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சி மேகாலயாவில் முன்னிலை வகிக்கிறது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜகதான் ஆட்சி புரிந்து வருகிறது.

    மோடி அலை

    மோடி அலை

    மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தப்பிறகு நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பாஜகவே பெரும்பாலும் வெற்றிபெற்றுள்ளது. இதற்கு மோடி அலையும் மோடி மேஜிக்குமே காரணம் என்றனர் பாஜகவினர்.

    பாஜக பிரச்சாரம்

    பாஜக பிரச்சாரம்

    இந்நிலையில் மேகாலயாவில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மேகாலயாவில் காங்கிரஸ் வேலை வாய்ப்பை உருவாக்க தவறிவிட்டதாகவும் முதலீடுகளை கொண்டுவரவில்லை என்றும் கல்வி மற்றும் போதுமான மருத்துவ சேவை வழங்கவில்லை என்றும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவில்லை என்றும் பாஜக பிரச்சாரம் செய்தது.

    தோற்றுப்போன மோடி மேஜிக்

    தோற்றுப்போன மோடி மேஜிக்

    இருப்பினும் மற்ற மாநிலங்களில் எடுபட்ட மோடி மேஜிக் மேகாலயாவில் தோற்றுப்போயுள்ளது. இந்த முறையாவது ஆட்கி அமைக்கலாம் என்ற பாஜகவின் கனவு தகர்ந்துள்ளது.

    English summary
    Prime Minister Modi Magic failed in Meghalaya assembly election. BJP is down in Meghalaya.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X