For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புது பஞ்சாயத்து ...பிரதமர் நரேந்திர மோடி எம்.ஏ படித்தாரா இல்லையா?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

மத்திய அரசு இணையதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி எம்.ஏ பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்துள்ளதாக தெரிவித்திருந்தது. குஜராத் பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து அவர் எம்.ஏ பட்டம் பெற்றுள்ளதாக அந்த இணையதளத்தில் தகவல் இருந்தது.

Modi’s educational qualifications questioned by Twitterati

இந்நிலையில் பிரதமரின் உண்மையான கல்வித் தகுதி குறித்து குஜராத்தை சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டார். இதையடுத்து தகவல் அறியும் ஆணையம் பிரதமரின் கல்வித் தகுதி குறித்து விளக்கமளிக்குமாறு மோடி அலுவலகத்தை அணுகியது.

ஆனால் இதற்கு பிரதமர் அலுவலகத் தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே டெல்லி ஆம்ஆத்மி சட்ட அமைச்சர் ஜிஜேந்திர சிங் தோமர், போலி சான்றிதழ் விவகாரத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து பிரதமர் அலுவலக இணையதளத்தில் நரேந்திர மோடி எம்.ஏ படித்துள்ளதாக கூறப்பட்ட வாசகங்களும் நீக்கப்பட்டு விட்டன.

தற்போது இந்த விவகாரம் ட்விட்டர் வாசிகளின் ஹாட் டாபிக்காக சுனாமி அலையாக வெடித்துக் கொண்டிருக்கிறது.. #DegreeDikhaoPMSaab என்ற பெயரில் ட்வீட்டுகள் அள்ளுகிறது..

அதுவும் கல்வித் தகுதி சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ஸ்மிருதி இரானி 'ஆஹா மாட்டினீங்களா" என கேட்கும் தொனியிலான சிரிப்புப் படம் வைரலாக ஓடிக் கொண்டிருக்கிறது. (https://twitter.com/GreatIndiaFirst/status/629953908341739520)

English summary
After Human Resources and Development Minister Smriti Irani and former Law Minister of Delhi Jitendra Singh Tomar, Prime Minister Narendra Modi is in the centre of storm over his degree. The hashtag #DegreeDikhaoPMSaab has been trending on top with Twitterati questioning the qualification of the Prime Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X