ஒரு நொடிக்கு ஒன்று என 1 வாரத்தில் மட்டும் 8.5 லட்சம் கழிப்பறைகள் கட்டினோம்.. மோடியின் பலே கணக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஒரே வாரத்தில் 8.5 லட்ச கழிப்பறைகளை கட்டி மோடி சாதனை- வீடியோ

  பாட்னா: ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பீகாரில் 5,259 டாய்லெட்டுகள் கட்டப்படுவதாக பிரதமர் மோடி கணக்கு காட்டியுள்ளார்.

  பீகாரில் நடந்த தூய்மை இந்தியா மாநாட்டில் அவர் இப்படி பேசியுள்ளார். இந்த மாநாட்டில் 20,000க்கும் அதிகமான தூய்மை இந்தியா ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

  பீகார் தூய்மையில் ஏற்பட்டு இருக்கும் திடீர் புரட்சி குறித்து அவர் பாராட்டி பேசியுள்ளார். ஆனால் மோடியின் பேச்சு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

  டாய்லெட்

  டாய்லெட்

  பீகாரில் பல பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டப்பட்டது. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நிறைய கழிப்பறைகள் கட்டப்பட்டது. இதற்கு ஆதாரமாக ஜிபிஎஸ் வசதியுடன், புகைப்படம் எடுத்து, அரசு ஆவணங்களில் அந்த விவரங்களை பதிவு செய்து இருக்கிறது மத்திய பாஜக அரசு.

  மோடி பாராட்டு

  மோடி பாராட்டு

  இதை மோடி பீகாரில் நடந்த தூய்மை இந்தியா விழா ஒன்றில் பாராட்டி இருக்கிறார். அப்போது பேசிய அவர் ''பீகாரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8.5 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. அது ஒன்றும் எளிதான காரியம் இல்லை. அந்த அளவிற்கு வேகமாக பணிகள் நடந்துள்ளது. இதன் மூலம் பீகார் இன்னும் சில மாதங்களில் பெரிய அளவில் வளரும் என்பது உறுதி'' என்று குறிப்பிட்டார்.

  தப்பு கணக்கு

  ஆனால் இந்த கணக்கில் நிறைய முறைகேடு இருப்பதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர். இவர் ''மோடி சொல்லும் கணக்குப்படி பார்த்தால் ஒரு நாளைக்கு 1,21,428 கழிப்பறைகள் கட்டியுள்ளனர். தினமும் 5,259 கழிப்பறைகள் கட்டியுள்ளனர். ஒரு நிமிடத்திற்கு 85 கழிப்பறைகள் கட்டியுள்ளனர்'' என்று கலாய்த்து இருக்கிறார்.

  எதோ முறைகேடு

  எதோ முறைகேடு

  மோடி கூறிய கணக்கு படி பார்த்தால் ஒரு நொடிக்கு 1.4 கழிப்பறைகள் கட்டியுள்ளனர். உலகத்தில் தற்போது இருக்கும் எந்த தொழில்நுட்பத்தை கொண்டும் இந்த செயலை செய்ய முடியாது. இந்த நிலையில் இது பற்றி மத்திய அரசு ஆவணங்களில் தகவல் பதிவேற்றப்பட்டது எப்படி, இதில் ஏதோ முறைகேடு நடந்துள்ளது என்று மக்கள் சந்தேகிக்கின்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Modi says wrong calculation on Toilet constructed under Swachh Bharat Scheme. He said that nearly 8.5 lakh toilets constructed in last one week under Swachh Bharat Scheme.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற