மத்தியப்பிரதேச புதிய முதல்வராக இன்று பதவியேற்கிறார் மோகன் யாதவ்.. விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
போபால்: மத்தியப்பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் மோகன் யாதவ்.துணை முதலமைச்சர்களாக ராஜேந்திர சுக்லா மற்றும் ஜகதீஷ் தேவ்டா ஆகியோர் பொறுப்பேற்க உள்ளனர். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
மத்திய பிரதேசத்தில்., பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மெஜாரிட்டி பெற 116 இடங்கள் போதும். அங்கே சாதாரண வெற்றி இல்லாமல் மாபெரும் இமாலய வெற்றியை பாஜக பதிவு செய்து உள்ளது. இந்தியா கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் களமிறங்கியது அங்கே பாஜகவிற்கு சாதகமாக மாறியுள்ளது.

ஓரம்கட்டப்பட்ட சவுகான்: மத்திய பிரதேசத்தில் பாஜக யாரும் எதிர்பாராத விதமாக சீனியர் லீடர்களை ஓரம் கட்டிவிட்டு மோகன் யாதவை முதல்வராக தேர்வு செய்தது. யாதவ் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கிய பாஜக அதிரடி காட்டி உள்ளது. முக்கியமாக சிட்டிங் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஓரம் கட்டப்பட்டு உள்ளார்.
மத்திய பிரதேசத்திலும் சிவராஜ் சிங் சவுகான் மாநில முகமாக இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக அவர் ஒதுக்கப்படலாம் என்கிறார்கள். தனக்கே போட்டியாக சிவராஜ் சிங் சவுகான் வரலாம் என்பதால் அவரை ஓரம்கட்ட மோடி பிளான் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக யாரும் எதிர்பாராத விதமாக சீனியர் லீடர்களை ஓரம் கட்டிவிட்டு மோகன் யாதவை முதல்வராக தேர்வு செய்தது.
மோடி பங்கேற்பு: இந்த பதவி ஏற்பு நிகழ்வில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

தேர்தல் வெற்றி: மேலும் ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான தகுதியைப் பெற்றது. சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கரில் பாஜக அபார வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 54 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்க 46 உறுப்பினர்கள் இருந்தால் போதுமானது. இதன் மூலம் அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது பாஜக. காங்கிரஸ் கட்சி 35 இடங்களில் மட்டும் வென்றது. கடந்த 2018 தேர்தலோடு ஒப்பிடுகையில் கையில் இருந்த 33 இடங்களை காங்கிரஸ் இழந்துள்ளது.
முதல்வர் தேர்வு: ராஜஸ்தான் முதலமைச்சர் பதவிக்கு பாஜகவில் பல தலைவர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், முதல் முறை எம்.எல்.ஏவான பஜன்லால் சர்மா, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். சத்தீஸ்கர் மாநில புதிய முதல்வராக பழங்குடியினத் தலைவர் விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இது போக சத்தீஸ்கரில் முன்னாள் முதல்வர் டாக்டர் ராமன் சிங், அருண் சவ் துர்க். எம்பி விஜய் பாகேல் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் மற்றும் பாஜக பொதுச் செயலாளர் ஓபி சவுத்ரி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முதல்வர் பதவிக்கு வலுவான போட்டியாளர்களாக இருந்தனர். அவர்கள் எல்லோரும் ஓரம்கட்டப்பட்டு உள்ளனர். தன்னை தவிர பாஜகவில் மாநில அளவில் வலுவான முகம் இருக்க கூடாது என்பதில் மோடி உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications