குஜராத்தில் இன்று கன அல்லது மிக கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
குஜராத்தில் கன அல்லது மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
டெல்லி: குஜராத்தில் இன்று கன அல்லது மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் குஜராத்தின் பல பகுதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதேபோல் கோவா, கொங்கன் உள்ளிட்ட பகுதிகளிலும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ஒடிசா, சவுராஷ்டிரா, மத்திய மகாராஷ்டிரா, தெலுங்கானா, கடலோர கர்நாடகா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
உத்தரகாண்ட், மேற்கு மத்திய பிரதேசம்இ விதர்பா, கடலோர ஆந்திரா, வடக்கு உள் கர்நாடகாக, மற்றும் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 19 ஆம் தேதி வட வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
அடுத்த 5, 6 நாட்களுக்கு தென் மேற்கு பருவமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில குஜராத்தில் கன மற்றும் மிக கனமழை பெய்துள்ளது. உத்தரகாண்ட், கிழக்கு ராஜஸ்தான், கொங்கன், கோவா, அசாம், மேகாலயா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications