ராகுலை விட மோடியைத்தான் நிறைய இந்தியர்கள் விரும்புகிறார்களாம்.. அமெரிக்காவிலிருந்து 'ப்பூ'!
வாஷிங்டன்: லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கும் மேலானோர் பாஜகவை ஆதரிப்பார்களாம். காங்கிரஸுக்கு 20 சதவீதத்திற்கும் குறைவான ஆதரவே கிடைக்குமாம்...
கருத்துக் கணிப்புகளெல்லாம் சந்தேகப் பார்வையின் கீழ் வந்துள்ள இந்த நேரத்தில் இப்படி ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த ப்பூ (Pew) என்ற நிறுவனத்தின் சர்வே முடிவு.
ஆனால் எந்தக் கட்சிக்கு எத்தனை சீட் கிடைக்கும் என்றெல்லாம் இந்த சர்வே கூறவில்லை. மாறாக இரு கட்சிகளுக்கும் எத்தனை சதவீத ஆதரவு கிடைக்கும் என்பதை மட்டுமே சொல்லியுள்ளது.

ப்பூ.. சொல்வது என்ன...
இந்திய வாக்காளர்களில் மூன்றில் ஒருவர், பாஜகவுக்கு ஆதரவு தருகிறார். பாஜகதான் அடுத்து நாட்டை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று வாக்காளர்கள் கருதுகிறார்கள்.

காங்கிரஸ் மீது அதிருப்தியாம்
மக்களுக்கு ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு மீது நம்பிக்கை போய் விட்டது தெரிகிறது. அதிருப்தி அலை வீசுகிறது.

ராகுலை விட மோடிக்கு ஆதரவு அதிகம்
ராகுல் காந்தியை விட நரேந்திர மோடிக்கு மக்களிடையே ஆதரவு அதிகம் காணப்படுகிறது.

2462 பேரிடம் கருத்து கேட்டு
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 2464 பேரிடம் கருத்து கேட்டு ப்பூ இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.

மார்ஜின் ஆப் எர்ரர் 3.8 சதவீதம்
இந்த கருத்துக் கணிப்பின் மார்ஜின் ஆப் எர்ரர் 3.8 சதவீதம் என்று அது கூறியுள்ளது.

பத்தில் ஆறு பேருக்கு பாஜக வேண்டுமாம்
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பத்தில் 6 பேர் பாஜகவை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

10ல் 2 பேருக்குத்தான் காங்கிரஸ் தேவையாம்
அதேசமயம், 10ல் 2 பேர்தான் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர விரும்புவதாக தெரிவித்துள்ளனராம்.

மற்றவர்களுக்கு 12 சதவீத ஆதரவு
காங்கிரஸ், பாஜக தவிர்த்த மற்ற கட்சிகளுக்கு மொத்தமாக 12 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஊரகம்- நகர்ப்புறம்
ஊரகப் பகுதிகளில் பாஜகவை ஆதரி்பபோர் 64 சதவீதம் ஆவர். நகர்ப்புறங்களில் 60 சதவீத ஆதரவு காணப்படுகிறது.

வட மாநிலங்களில் பாஜகவுக்கு 74 சதவீத ஆதரவு
வட மாநிலங்களில் அதாவது உ.பி., ம.பி, ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், டெல்லி ஆகியவற்றில் பாஜகவுக்கு 74 சதவீத ஆதரவு காணப்படுகிறது.

குஜராத்தில் பாஜகவுக்கு பின்னடைவு
அதேசமயம், நரேந்திர மோடியின் குஜராத், மகாராஷ்டிரா, சட்டிஸ்கரில் பாஜகவுக்கு ஆதரவு குறைந்து காணப்படுகிறதாம். அதாவது 54 சதவீத ஆதரவு இருக்கிறதாம்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications