ஷாக்! தாயையும் 6 வயது மகளையும்! ஓடும் காரில் மிருகங்களான கும்பல்! பதறிய போலீஸ்! மனசாட்சியே இல்லையா?
டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஓடும் காரில் தாயும் அவரது மகளும் மர்ம கும்பலால் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹரித்வார் மாவட்டத்தில்தான் ஓடும் காரில் இந்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது. இதுகுறித்து ஹரித்வார் மாவட்ட மூத்த போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், வெள்ளிக்கிழமை இரவு சிறுமியும் அவரது தாயும் காளியாரிலிருந்து ரூர்க்கிக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு மைனர் சிறுமியும் அவரது தாயும் காளியாரிலிருந்து ரூர்க்கிக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

பெரும் அதிர்ச்சி
காளியார்-ரூர்க்கி சாலையில் அந்தப் பெண்ணும் அவரது மகளும் சாலையில் சென்ற காரில் லிப்ட் கேட்டு ஏறியுள்ளனர். அதன்பிறகு, மூன்று முதல் நான்கு பேர் காருக்குள் இருந்த இருவரையும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கங்கை கால்வாய் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் வீசிவிட்டு காரில் தப்பிச் சென்றனர்.

தாய் - மகள் பலாத்காரம்
சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில். இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட தாய் பிச்சை எடுத்து பிழைத்து வந்த நிலையில், அங்குள்ள தங்குமிடம் ஒன்றில் மகளுடன் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அருகிலுள்ள ஊருக்கு மகளுடன் சென்ற போது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

போலீசார் விசாரணை
சிறுமியின் தாயின் புகாரின் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது ரூர்க்கி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (பலாத்காரம்) மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே சந்தேகத்தின் பேரில் ஒருவரின் புகைப்படத்தையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

மகளிர் ஆணையம் விசாரணை
குழந்தையின் மருத்துவ அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தேசிய மகளிர் ஆணையம் (NCW) பெண் மற்றும் அவரது ஆறு வயது மகள் மீது கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. NCW இந்த விஷயத்தை ஆராய மூன்று பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications