For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ம.பி. இடைத்தேர்தல்: பாஜக 21, வெறும் 6 இடங்களில் மட்டுமே காங். முன்னிலை

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நடந்த சட்டசபை இடைத் தேர்தலில் 21 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 6 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் ஆட்சியை பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் தக்கவைக்கிறார்.

Recommended Video

    மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநில இடைத்தேர்தல்களிலும் BJP-யே முன்னிலை | Oneindia Tamil

    மத்திய பிரதேச மாநிலத்தின் 19 மாவட்டங்களில் 28 சட்டசபை இடங்களில் நடந்த இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்த வாக்குப்பதிவு முடிவுகள் மத்திய பிரதேத்தின் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசின் தலைவிதியை தீர்மானிக்க போகிறது.

     MP bypolls live updates: BJP leads in 18 seats, Congress in 8; Kamal Nath visits Hanuman temple

    அத்துடன் அரசியல் சூழ்நிலைகள் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவுக்கு மாறிய பிறகு ஏற்பட்டுள்ள விளைவை காட்டும் முடிவு தான் இந்த தேர்தல் முடிவு.
    ஏழு மாதங்களுக்கு முன்பு ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸை விட்டு வெளியேறி பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இதன் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தில் அதிகாரத்தை இழந்த முன்னாள் முதல்வர் கமல்நாதிற்கும் இந்த தேர்தல் முடிவு மிகவும் முக்கியமானது.

    229 என்ற பலத்துடன் எம்.பி. சட்டசபையில் 107 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட பாஜக, மத்தியப் பிரதேசத்தில் அதிகாரத்தைத் தக்கவைக்க இந்த 28 இடங்களில் குறைந்தது எட்டு இடங்களை வெல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. காங்கிரசிடம் 87 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

    மத்திய பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் நேரலை விவரம்:

    2:00 pm: தற்போதைய நிலவரப்படி 21 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 6 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பிஎஸ்பி ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது

    1 :15: ஆரம்பத்தில் இருந்தைப்போல் மீண்டும் மத்தியப் பிரதேச மாநில மக்கள் மீண்டும் மாநிலத்தை ஆளும் பொறுப்பை பாஜகவுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர் என்பது இந்த தேர்தல் முன்னிலை நிலவரம் மூலம் தெளிவாகத் தெரிகிறது என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

    1:00 : பாஜக 19 இடங்களிலும் காங்கிரஸ் 8 இடங்களிலும் முன்னிலை

    12 : 20: தேர்தல் ஆணையம் இப்போது வெளியிட்ட அறிவிப்பில் பாஜக 20 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், பிஎஸ்பி 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது

    12: 05: தேர்தல் ஆணையம் வெளியிட்ட சமீபத்தில் அப்டேட்டில் பாஜக 17 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், பிஎஸ்பி 2இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது

    காலை 11 50: மத்திய பிரதே சஅமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பாஜக எதையும் இழக்கவில்லை, யாருக்கு இழப்போ அவர்களிடம் போய் கேளுங்கள். எங்களுக்கு இந்த தேர்தலில் லாபம் தான். நான் திக்விஜய்சிங்கின்(காங்கிரஸ்) அறிக்கையை பார்த்தேன். அவர்கள் வாக்கு பதிவு நடந்த ஈவிஎம் மிசின் குறித்து வேண்டுமேன்றே சந்தேகம் எழுப்புகிறார்கள். அதாவது பாஜகவின் வெற்றி குறித்து கேள்வி எழுப்புகிறார். நாங்கள் திக்விஜய் சிங், கமல்நாத் போன்ற மூத்த தலைவர்களை மீறி முழு மெஜாரிட்டி பெற்றுள்ளோம்" என்றார்.

    காலை 11: 10 பாஜக 17 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் முன்னிலை

    காலை 10: 20: மூன்று சுற்று எண்ணிக்கையின் பின்னர் மந்தாட்டா சட்டசபை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அப்டேட் விவரம்

    மந்தாட்டா சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க.வின் நாராயண் படேல் 4923 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

    பாஜக: 3891 வாக்குகள்
    காங்கிரஸ்: 2408 வாக்குகள்
    மற்றவை: 1483 வாக்குகள்

    காலை 9:40: மணி நிலவரம்: மத்திய பிரதேசத்தில் இடைதேர்தல் நடைபெறும் 28 இடங்களில் 18 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 8 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களில் முன்னிலை வகித்தது.

    காலை 9:30 மணி: வாக்கு எண்ணிக்கை நடந்து வருவதால், மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் ஹனுமான் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.

    காலை 9:15: 28 இடங்களில் பாஜக 9 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகித்தது.

    காலை 8:00 மணி: 28 சட்டசபை இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

    English summary
    MP bypolls live updates: the result of the Madhya Pradesh bypolls will be announced on Tuesday. The counting of votes has begun across 28 assembly seats in 19 districts of the state. The results will decide the fate of the Shivraj Singh Chouhan government and will also hint at the effect the Jyotiraditya Scindia factor in the political scenario.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X