எம்.பி. ஹேமமாலினி சென்ற கார் மற்றொரு காருடன் மோதி பயங்கர விபத்து.. 4 வயது குழந்தை பலி..
ஜெய்ப்பூர் : நடிகையும் மதுரா தொகுதி பா.ஜ.க. எம்.பி.யுமான ஹேமமாலினி சென்ற கார் மற்றொரு காருடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெற்றோருடன் வந்த 4 வயது குழந்தை பரிதாபமாக பலியானது. இந்த விபத்தில் ஹேமமாலினிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
தனது தொகுதியான மதுராவில் இருந்து ஹேமமாலினி பென்ஸ் காரில் ஜெய்ப்பூர் சென்று கொண்டிருந்தார்.

டவ்சா என்ற பகுதி அருகே அதிவேகமாக வந்த ஹேமமாலினியின் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி, எதிரே வந்த ஆல்டோ கார் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் ஆல்டோ காரில் பெற்றோருடன் வந்த 4 வயது குழந்தை பரிதாபமாக பலியானது. பலத்த காயமடைந்த மற்றொரு குழந்தை மற்றும் பெற்றோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில், நடிகை ஹேமமாலியின் இடது கண் மற்றும் மூக்கு அருகே பலத்த காயமடைந்தது. இதையடுத்து அவர் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காயமடைந்த பகுதியில் தையல் போடப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications