லஞ்சம் கொடுத்து இரட்டை இலையை வாங்க முயற்சித்த தினகரனை கைது செய்ய வேண்டும்… சசிகலா புஷ்பா ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமை இல்லாமல் அதிமுக தொண்டர்கள் தவிக்கின்றனர் என ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பா குற்றம் சாட்டியுள்ளார். லஞ்சம் கொடுத்து இரட்டை இலை சின்னத்தை வாங்க முயற்சி செய்த டிடிவி தினகரனை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பன்னர் அதிமுகவில் களேபரத்திற்கு பஞ்சமே இல்லை. ஓபிஎஸ் அணி மற்றும் சசிகலா அணி பிரிந்து நின்று ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டை அள்ளி வீசி வந்தனர்.
இந்நிலையில், திடீரென இரு அணிகளும் இணைவது குறித்த பேச்சுக்கள் எழுத்தன. இதனை மறுத்தும், ஆதரித்தும் இரு அணிகளும் பேசி வருகின்றன.

அதிமுகவின் தலைமை

அதிமுகவின் தலைமை

இதனை ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பா கடுமையான சாடினார். இதுகுறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அதிமுக தொண்டர்கள் தலைமை இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு நல்ல தலைமை தற்போது தேவைப்படுகிறது.

தினகரன் கைது

தினகரன் கைது

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வாங்குவதற்காக சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன் பல கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது. இந்தக் குற்றாச்சாட்டின் பேரில் அவர் உடனே கைது செய்யப்பட வேண்டும்.

துரோகம்

துரோகம்

ஓபிஎஸ், சசிகலா குடும்பத்துடன் மீண்டும் இணைவது குறித்து பேசியிருப்பது உச்சகட்ட துரோகம். இதனை அதிமுக தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். இப்போது மட்டும் சசிகலா நடராஜன் குடும்பத்தின் மீது அவர் வைத்த குற்றச்சாட்டுகள் எல்லாம் மறைந்து போய்விட்டதா? அதே போன்று சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட போது அதனை ஆதரித்தவர் ஓபிஎஸ்.

ஊழல்

ஊழல்

இந்த ஆட்சியில் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவருமே ஊழல்வாதிகள். வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தி குற்றம்சாட்டப்பட்டுள்ள விஜயபாஸ்கரை பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajya Sabha MP Sasikala Pushpa has urged to arrest TTV Dinakaran for giving bribe to get two leaves symbol.
Please Wait while comments are loading...