கைலாசாவில் மல்டி லேயர் குவாரண்டைன் வசதி இருக்கு...கொரோனாவில் இருந்து தப்ப இங்கு வாங்க - நித்யானந்தா
கைலாசா நாட்டில் மல்டி லேயர் குவாரண்டைன் வசதி இருப்பதாக சாமியார் நித்யானந்தா கூறியுள்ளார். கொரோனா மூன்றாவது அலையில் இருந்து தப்பிக்க கைலாசாவுக்கு வரலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கைலாசா: கொரோனா 3வது அலையில் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்றும் உயிரிழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் நித்யானந்தா தெரிவித்துள்ளார். மல்டி லேயர் குவாரண்டைன் மட்டுமே உங்களை காக்கும் என்றும் அனைவரும் கைலாசாவிற்கு இடம்பெயர்வது நல்லது என்றும் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
Recommended Video
புரட்டாசி மாதத்தில் இந்தியாவில் கொரோனா புரட்டி எடுக்கப் போகிறது என்று கூறியுள்ள நித்யானந்தா, தன்னுடைய காலடி பட்டால்தான் கொரோனா நாட்டை விட்டுப் போகும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து தப்பி ஓடி கைலாசா என்ற தனி நாட்டிற்கு அதிபதியாகியுள்ள நித்யானந்தா, என் நாடு என் மக்கள் என்று ஜாலியாக வாழ்ந்து வருகிறார். தினசரியும் அவரது யுடுயூப் சேனலில் எதையாவது பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

நித்யானந்தா பேச்சு
சில தினங்களுக்கு முன்பு யுடுயூப்பில் பேசியுள்ள நித்யானந்தா, இந்தியாவில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதும், கூட்டமாக செல்வதையும் பார்க்கும்போது அவர்கள் கொரோனா 3ஆம் அலையை வரவேற்பது போல உள்ளது. 3ஆம் அலை மோசமானதாக இருக்கும் என்று கூறியுள்ளார் நித்யானந்தா.

டெல்டா பிளஸ், லாம்டா
டெல்டா பிளஸ், லம்டா வைரஸ்கள் மிகவும் மோசமானவை. இந்த வைரஸ்கள் கொரோனாவின் அப்டேட் வெர்சனாக வந்துள்ளது. நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பை கொரோனா அதிகமாக பாதித்துள்ளது. இதனால் மருத்துவ துறை மட்டுமல்ல சமூக உள்கட்டமைப்பு, நிர்வாக கட்டமைப்பு என அனைத்தும் பாதிக்கப்படுகிறது.

கொரோனாவே இறந்து விடும்
ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் சமூக கட்டமைப்பு சரியாக இல்லை. இங்கு மக்கள் கூட்டமாக செல்கிறார்கள். தொற்று நோயை தடுப்பதில் இந்தியாவில் சமூக உள்கட்டமைப்பு தோற்று போய் உள்ளது. குடும்பத்தோடு ஷாப்பிங் செல்கிறார்கள். லக்சரி கடைகளுக்கு செல்கிறார்கள். தி.நகர் ரங்கநாதன் தெருவில் கூட்டத்தை பார்த்தால் கொரோனாவே இறந்து விடும் போல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மூன்றாவது அலை வீசும்
புரட்டாசி மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கப்போகிறது. கொரோனாவின் பல வேரியண்ட்கள் உருவாகிவிட்டன. 3வது அலையில் உயிரிழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும். பாதிப்பும் கடுமையாக இருக்கும். எனவே மல்டி லேயர் குவாரண்டைன் மட்டுமே உங்களை காக்கும்.

கைலாசாவிற்கு வாருங்கள்
மக்களே வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள் என்று நான் சொல்கிறேன். மல்டி லேயர் குவாரண்டைன் வசதியை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் அல்லது கைலாசாவுக்கு வந்து விடுங்கள். இங்கு தான் மல்டி லேயர் குவாரண்டைன் வசதி உள்ளது.

தனிமைதான் பாதுகாக்கும்
நான் எனது பக்தர்களுக்கும், சன்னியாசிகளுக்கும், பிரம்மசாரிகளுக்கும் சொல்கிறேன். இந்த ஆண்டு உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள். தனிமையில் இருங்கள் அதுதான் உங்களுக்கு குடும்பத்தினர் அல்லது நீங்கள் மிகவும் நேசிப்பவர்களை கைலாசாவுக்கு அழைத்து சென்று விடுங்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications