For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்ற வருடம் எல்பின்ஸ்டன் பாலம்.. இந்த வருடம் அந்தேரி ரயில் நடை மேம்பாலம்.. உடைந்து விழுந்த சோகம்

மும்பை அந்தேரி ரயில் நிலையத்தில் உள்ள நடை மேம்பாலம் உடைந்து நொறுங்கியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கடும் மழையினால் மும்பையில் நடை மேம்பாலம் உடைந்து விபத்து- வீடியோ

    மும்பை: மும்பை அந்தேரி ரயில் நிலையத்தில் உள்ள நடை மேம்பாலம் உடைந்து நொறுங்கியுள்ளது.

    மும்பை அந்தேரி ரயில் நிலையத்தில் அந்தேரி கிழக்கு பகுதியையும் அந்தேரி மேற்கு பகுதியையும் இணைக்கும் வகையில் பாலம் உள்ளது. கொஹ்லே பாலம் என்று அழைக்கப்படும் இந்த பழைய பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகிறார்கள்.

    Mumbai Andheri railway station bridge collapses due to heavy rain

    முக்கியமாக காலை மற்றும் மாலையில் அதிக அளவில் மக்கள் இந்த பாலத்தில் நடந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இந்த பாலம் இன்று உடைந்து நொறுங்கியுள்ளது.

    கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே மும்பையில் பெரிய அளவில் மழை பெய்கிறது. இடையில் ஒரு வாரம் நின்றிருந்த மழை நேற்று மீண்டும் பெரிய அளவில் பெய்தது. இந்த மழை காரணமாக தற்போது அந்த பெரிய பாலம் இடிந்துள்ளது.

    இதனால் அந்த ரயில் நிலையத்தை கடக்க முடியாமல் ரயில்கள் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. மும்பையின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை. யார் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை.

    எல்பின்ஸ்டன் ரயில் மேம்பாலம்:

    சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் இதே போல் மும்பையில் எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலால் மக்கள் பலியானார்கள். ரயில் நிலையத்தில் மின்கசிவு என்று வதந்தி பரவ, மக்கள் ரயில்வே மேம்பாலத்தில் கூட்டமாக ஓட கடைசியில் நெரிசலில் சிக்கி 22 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவத்தால் மும்பை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சரியாக ஒருவருடம் கழித்து இதே போல் ஒரு சம்பவம் தற்போது அந்தேரியில் நடந்துள்ளது.

    English summary
    Mumbai Andheri railway station bridge collapses due to heavy rain. Sources say no casualty yet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X