இஸ்லாத்திற்கு எதிராக யார் பேசினாலும் அவர்களின் தலையை வெட்டுவேன்: மத குரு சபதம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இஸ்லாத்திற்கு எதிராக யார் பேசினாலும் அவர்களின் தலையை வெட்டுவேன் என இஸ்லாமிய தலைவர் ஒருவர் டிவி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய தலைவர் ஒருவர் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் அவர் பேசிய பேச்சு அப்படி.
வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
இஸ்லாத்திற்கு எதிராக யார் பேசினாலும் அவர்களின் தலையை வெட்டுவேன். இஸ்லாத்திற்கு எதிராக பேசி என்னை குற்றம் செய்ய தூண்டுகிறார்கள். அவரின் பேச்சை கேட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் அப்படி என்றால் உங்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லையா என்று கேட்டார்.
அதற்கு மத தலைவரோ, இஸ்லாத்தை அவமதிக்கும் நபரை வெட்டி அதன் பிறகு சட்டத்தின் முன்பு கொண்டு செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications