ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகார சட்டத்தை AFSPA திரும்பப் பெறுக: நாகாலாந்து முதல்வர் வலியுறுத்தல்
கோஹிமா: ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நாகாலாந்து முதல்வர் நைபியு ரியோ வலியுறுத்தி உள்ளார்.
Recommended Video
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் 14 அப்பாவி பொதுமக்களை ராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்தனர். இச்சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படுகொலைக்கு ராணுவம் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் நாகாலாந்து மாநில அரசும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மோன் மாவட்டத்துக்கு முதல்வர் நைபியு ரியோ இன்று நேரில் சென்றார்.

கைவிடுக ஆயுத படை சட்டத்தை..
ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 14 அப்பாவி நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ5 லட்சம் நிதி உதவி வழங்கினார். மேலும் 14 பேரின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளிலும் நைபியு ரியோ பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நைபியு ரியோ, ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்குகிற சட்டமான AFSPA ஐ மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

ஏன் ஆயுதப் படைச் சட்டம்?
மேலும், தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ளத்தான் ஆயுதப் படையினருக்கான சிறப்பு சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். நாகாலாந்து மாநிலத்தில் ஏன் இச்சட்டம் அமலில் இருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பினார். இதுபோன்ற அப்பாவி பொதுமக்கள் ராணுவத்தால் படுகொலை செய்யப்படும் போது சிறப்பு அதிகாரம் வழங்குகிற சட்டம் ராணுவத்தினரை பாதுகாக்கிறது என்பது மனித உரிமை ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.

ராணுவத்தின் விசாரணை குழு
இதனிடையே 14 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மேஜர் ஜெனரல் நிலையிலான ராணுவ அதிகாரி தலைமையில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, துப்பாக்கிச் சூடு ஏன் நடத்தப்பட்டது? அதன் பின்னணி என்ன? உளவுத்துறை தகவல்கள் என்ன? என்பது உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தும்.

நாடாளுமன்றத்தில்..
நாடாளுமன்றத்திலும் நாகாலாந்து விவகாரம் இன்று எதிரொலித்தது. லோக்சபாவில் நாகாலாந்தின் ஆளும் என்.டி.பி.பி கட்சி எம்.பி யெப்தோமி பேசுகையில், 14 பேரின் குடும்பத்துக்கு மாநில அரசு தலா ரூ5 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளது. மத்திய அரசும் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது என்றார். ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி அமளி நிலவியதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications