"கல்யாணம் பண்ணிக்காதீங்க.." மக்கள் தொகையை குறைக்க ஐடியா கொடுத்த நாகலாந்து அமைச்சர்
மக்கள் தொகையை கட்டுப்படுத்த கல்யாணம் பண்ணிக்காதீங்க என நாகலாந்து மந்திரி டெம்ஜென் இம்னா வெளியிட்ட ஒரு யோசனை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோஹிமா: இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் அதாவது 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. இதனால், அதிகரித்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், உலக மக்கள் தொகை தினமான இன்று நாகலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா மக்கள் தொகையை கட்டுப்படுத்த வெளியிட்ட ஒரு யோசனை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நாகலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா தனது டுவிட்டர் பதிவில், ''உலக மக்கள் தொகை தினமான இன்று, மக்கள் தொகை பெருக்கம் குறித்த விவகாரத்தில் நாம் விழிப்புடன் இருப்போம். அல்லது என்னைப்போல திருமணம் செய்யாமல் சிங்கிள் ஆக (single) இருந்து விடுங்கள். நாம் ஒன்றிணைந்து நிலையான எதிர்கால வளர்ச்சிக்கு பங்களிப்போம். எனவே நீங்கள் இப்பொழுதே சிங்கிள் இயக்கத்தில் சேருங்கள் " எனப்பதிவிட்டு இருந்தார்.

நகைச்சுவை உணர்வோடு பதிவிட்ட நாகலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னாவின் கருத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். டுவிட்டரில் நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், உங்கள் நகைச்சுவை உணர்வு தனித்துவமானது. மிகவும் முக்கியமான விஷயங்களில் கூட நீங்கள் நகைச்சுவை உணர்வோடு வெளியிடும் கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று கூறினார்.
ஏற்கனவே, தனக்கு சிறிய கண்கள் இருப்பதால் ஏராளமான பலன்கள் இருப்பதாக டெம்ஜென் இம்னா கூறியது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியிருந்தது. இனவெறி குறித்த விமர்சனங்களுக்கு மிகவும் நகைச்சுவை உணர்வோடு டெம்ஜன் இம்னா பதிலடி கொடுத்து இருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டி இருந்தனர். அந்த பதிவில் இம்னா கூறும் போது, " சிறிய கண்களாக இருப்பதால் அதிக தூசுகள் என் கண்களுக்குள் செல்ல முடியாது. அதேபோல், நீண்ட நேரம் நிகழ்ச்சி நடைபெற்றால் என்னால் மேடையில் இருந்தாலும் கூட எளிதாக தூங்கிவிடமுடியும்' என்றார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications