For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூகுளில் அதிகம் தேடப்பட்ட அரசியல் தலைவர் நரேந்திர மோடி… தென்னிந்தியாவில் ஜெயலலிதா!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: உலகம் முழுவதிலும் இருந்து அதிகமாக தேடப்பட்ட இந்திய அரசியல் தலைவர்களின் பட்டியலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பெயர் முதல் இடத்தை பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தப்பட்டியலில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய தலைவராக ஜெயலலிதா இடம் பெற்றுள்ளார்.

இணையதள பயன்பாட்டாளர்களில் யார், யார், எந்தெந்த இணையத்தின் பெயரை அதிகமாக தேடி பயனடைந்துள்ளனர் என்ற நுழைவு (லாக்-இன்) கணக்குகளை 'பெட்டா' என்ற நிறுவனம் தினந்தோறும் பதிவு செய்து வருகிறது.

இதன் அடிப்படையில், உலகின் பிரபல மனிதர்கள், நிறுவனங்கள் தொடர்பான தகவல்களில் அதிகமாக தேடப்பட்ட பெயர்களையும் 'பெட்டா' பதிவு செய்து வருகிறது. இந்த பதிவுகளின் சமீபத்திய தொகுப்பின்படி,

கூகுள் நம்பர் 1

கூகுள் நம்பர் 1

இவ்வகையில், உலகின் அதிக மக்கள் தேடிய பெயராக 'கூகுள்' சர்ச் எஞ்சின், இரண்டாவது இடத்தை பிரபல மனிதர்கள், பொருட்கள், சம்பவங்களை சிறுகுறிப்பாக இணயத்தில் பதிவு செய்து வைத்துள்ள 'விக்கிபீடியா'வும் பெட்டா'வில் இடம் பிடித்துள்ளது.

நரேந்திர மோடி நம்பர் 1

நரேந்திர மோடி நம்பர் 1

உலகம் முழுவதிலும் இருந்து அதிகமாக தேடப்பட்ட இந்திய அரசியல் தலைவர்களின் பட்டியலில் குஜராத் முதல்வரும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் பெயர் முதல் இடத்தை பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ராகுல் – சோனியா-மன்மோகன்சிங்

ராகுல் – சோனியா-மன்மோகன்சிங்

அவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, மூன்றாவது இடத்தை காங்கிரஸ் கட்சி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி, நான்காவது இடத்தை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பெற்றுள்ளனர்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

இந்தப் பட்டியலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 5 வது இடத்தில் உள்ளார். தென்னிந்த அளவில் அதிகம் தேடப்பட்ட தலைவராக ஜெயலலிதா முதலிடத்தில் உள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் – அகிலேஷ் யாதவ்

அரவிந்த் கெஜ்ரிவால் – அகிலேஷ் யாதவ்

இந்த பட்டியலில், ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆறாவது இடத்திலும், உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஏழாவது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர்.

நிதிஷ்குமார் - திக்விஜய் சிங்

நிதிஷ்குமார் - திக்விஜய் சிங்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எட்டாவது இடத்திலும், காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங் ஒன்பதாவது இடத்திலும், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பத்தாவது இடத்திலும் உள்ளனர்.

English summary
BJP's prime ministerial candidate Narendra Modi was the most searched politician, followed by Congress vice-president Rahul Gandhi, on Google in India during March-August period of this year, the Internet giant said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X