கார்கில் வெற்றி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கார்கில் போர் வெற்றியின் 15வது ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி தனது டிவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

டிவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது: கார்கில் வெற்றி தினமான இன்று நமது வீரர்களின் வீழ்த்த முடியாத தைரியம் மற்றும் தியாகத்தை நாம் நினைவு கொள்வோம். கார்கில் போர் தியாகிகளுக்கு நாடு வீரவணக்கம் செலுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரின் கார்கில் பகுதியில் 1999ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்து இந்தியா வெற்றி கொடியை ஏற்றிய நாள் ஜூலை 26 என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications