For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும், காங் வெறும் 78: நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்

By Veera Kumar
|

டெல்லி: பாஜக கூட்டணி அறுதி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும் என்று நியூஸ்எக்ஸ் தொலைக்காட்சி நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்:

தமிழகம்:

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்த 40 தொகுதிகளை பொறுத்தளவில் அதிமுகவுக்கு 27, திமுகவுக்கு 6, பாஜக கூட்டணிக்கு 6 , காங்கிரசுக்கு ஒரு இடம் கிடைக்கும் என்று நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பின் முழு விவரம்:

நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பின் முழு விவரம்:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 289 இடங்கள் கிடைக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 101 தொகுதிகளையும், பிற கட்சிகள் 153 தொகுதிகளையும் கைப்பற்றும். ராஜஸ்தானில் பாஜகவுக்கு 22 தொகுதிகள், காங்கிரசுக்கு 2 தொகுதிகள், பிற கட்சிக்கு 1 தொகுதியும், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணிக்கு 32 தொகுதிகள், காங்கிரஸ் கூட்டணி 14 தொகுதிகள், ஆம் ஆத்மி கட்சி மற்றும் பிற கட்சி தலா 1 தொகுதிகளில் வெல்லும் எனவும் அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

மேற்கு வங்கத்தில் பாஜக 2 தொகுதிகள்

மேற்கு வங்கத்தில் பாஜக 2 தொகுதிகள்

மத்திய பிரதேசத்தில் பாஜக 26 தொகுதிகளையும், காங்கிரஸ் 3 தொகுதிகளையும் கைப்பற்றும், மேற்கு வங்கத்தில் பாஜக 2 தொகுதிகள், காங்கிரஸ் 4 தொகுதிகள், திரிணாமுல் காங்கிரஸ் 27 தொகுதிகள், இடதுசாரிகள் 9 தொகுதிகளை கைப்பற்றுவார்கள் ஆந்திராவில் பாஜக கூட்டணி 12, காங்கிரஸ் 7 தொகுதிகள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 14 தொகுதிகள், டிஆர்எஸ் 8, பிறர் 1 தொகுதிகளை வெல்வார்கள்.

பிஜு ஜனதாதளம் 11

பிஜு ஜனதாதளம் 11

ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணி 9 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 3 தொகுதிகளையும், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா 1 தொகுதியையும் வெல்லும். கோவாவில் மொத்தமுள்ள இரு தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும். ஒடிசாவில் பாஜக கூட்டணி 6 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 4 தொகுதிகளையும், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் 11 தொகுதிகளையும் கைப்பற்றும்.

தெற்கு வளர்கிறது:

தெற்கு வளர்கிறது:

கர்நாடகாவில் பாஜக 18 தொகுதிகளையும், காங்கிரஸ் 7 தொகுதிகளையும், மஜத 3 தொகுதிகளையும் கைப்பற்றும். கேரளாவில் காங்கிரஸ் 11 தொகுதிகளையும், இடதுசாரிகள் 9 தொகுதிகளையும் கைப்பற்றுவார்கள். பாஜகவுக்கு ஒரு சீட்டும் இல்லை. புதுச்சேரியின் ஒரு தொகுதியையும் பாஜக கூட்டணி கைப்பற்றும், அந்தமான் நிகோபார் மற்றும் லட்சத்தீவு தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும்.

அதிமுகவுக்கு 27, திமுகவுக்கு 6

அதிமுகவுக்கு 27, திமுகவுக்கு 6

தமிழகத்தில் அதிமுகவுக்கு 27, திமுகவுக்கு 6, பாஜக கூட்டணிக்கு 5, காங்கிரசுக்கு ஒரு இடம் கிடைக்கும். புதுச்சேரி தொகுதியும் பாஜக கூட்டணிக்கு செல்கிறது.

சண்டீகரில் ஆம் ஆத்மி

சண்டீகரில் ஆம் ஆத்மி

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணி 4, காங்கிரஸ் கூட்டணி ஒரு தொகுதிகளை வெல்லும். சண்டீகரில் ஒரு தொகுதியை ஆம் ஆத்மி கைப்பற்றும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜக கூட்டணி 3 தொகுதிகள், காங்கிரஸ் கூட்டணி 2 தொகுதிகள், மக்கள் குடியரசு கட்சிக்கு 1 தொகுதி கிடைக்கும்.

வடகிழக்கு:

வடகிழக்கு:

மேகாலயாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலா 1 தொகுதிகளில் வெற்றி பெறும். நாகாலாந்திலுள்ள ஒரு தொகுதியையும் பாஜக கூட்டணி கைப்பற்றும். அசாமில் பாஜக கூட்டணி 6 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 5 தொகுதிகளையும் வெல்லும். மேகாலயாவில் பாஜக, காங்கிரஸ் கூட்டணிகள் தலா 1 இடங்களிலும், மிசோராமின் ஒரு தொகுதியையும் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும். நாகாலாந்தில் ஒரு தொகுதியை காங்கிரஸ் கூட்டணியும், சிக்கிமில் ஒரு தொகுதியை எஸ்.டி.எப் கட்சியும் கைப்பற்றும். திரிபுராவிலுள்ள 2 தொகுதிகளையும் இடதுசாரிகள் கைப்பற்றுவர். ஆகமொத்தம் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக கூட்டணி 10 தொகுதிகளில் வெல்லும்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி 4

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி 4

ஹிமாச்சல் பிரதேசத்தில் பாஜக கூட்டணி 3 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி ஒரு தொகுதியையும் கைப்பற்றும். ஹரியானாவில் பாஜ கூட்டணி 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 2 தொகுதிகளிலும் வெல்லும். பஞ்சாப் மாநிலத்தில் பாஜக கூட்டணி 6 தொகுதிகளையும், ஆம் ஆத்மி 4 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 3 தொகுதிகளையும் கைப்பற்றும்.

உத்தர பிரதேசத்தில் பாஜக 54

உத்தர பிரதேசத்தில் பாஜக 54

உத்தர பிரதேசத்தில் பாஜக 54 தொகுதிகளை வெல்லும். காங்கிரஸ் 7 தொகுதிகளை கைப்பற்றும். சமாஜ்வாதி கட்சி 11 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 8 தொகுதிகளையும் வெல்லும். டெல்லியில் 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும். காங்கிரஸ், ஆம் ஆத்மி டெல்லியில் ஒரு தொகுதியையும் கைப்பற்றாது. குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில், பாஜக 22 இடங்களில் வெல்லும். காங்கிரஸ் கூட்டணி 4 தொகுதிகளில் வெற்றிபெறும்.

மண்டலவாரியான நிலவரம்:

மண்டலவாரியான நிலவரம்:

வடகிழக்கு மாநிலங்களில் பாஜக கூட்டணி 10 தொகுதிகளில் வெல்லும். மேற்கு வங்கத்தை உள்ளடக்கிய கிழக்கு மாநிலங்களில் பாஜக கூட்டணிக்கு 45 தொகுதிகள் கிடைக்கும். காங்கிரஸ் கூட்டணிக்கு 21 தொகுதிகளும், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு 51 தொகுதிகள் கிடைக்கும். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜக கூட்டணிக்கு 37 தொகுதிகள், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 26 தொகுதிகள் கிடைக்கும். அதிமுக, திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் மொத்தம் 68 தொகுதிகளையும் கைப்பற்றும்.

வட மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி

வட மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி

வட மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி 141 இடங்களை கைப்பற்றும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி 25 இடங்களையும் பிற கட்சிகள் 25 தொகுதிகளையும் கைப்பற்றும். மேற்கு மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி 56 தொகுதிகளையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி 19 இடங்களையும், பிற கட்சி ஒரு தொகுதியையும் கைப்பற்றும்.

கட்சிகளின் தனிப்பட்ட பலம்:

கட்சிகளின் தனிப்பட்ட பலம்:

பாஜக மட்டும் தனித்து 251 தொகுதிகளை கைப்பற்றும், காங்கிரஸ் 3 இலக்கத்தை எட்ட முடியாமல் 78 சீட்டுகளை மட்டுமே கைப்பற்றும் எனவும் அந்த கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

English summary
According to the News X survey the NDA is set to win 289 seats, while the UPA is set to win 101.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X