சிங்கப்பூர் பயணம்.. தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த பிரதமர் மோடி..!
இந்திய பிரதமர் மோடியின் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் குறித்து சிங்கப்பூர் பத்திரிகைகளில் பல்வேறு தலைப்புகளில் செய்திகள் வந்துள்ளது.
சிங்கப்பூர்: இந்திய பிரதமர் மோடியின் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் குறித்து சிங்கப்பூர் பத்திரிகைகளில் பல்வேறு தலைப்புகளில் செய்திகள் வந்துள்ளது.
பிரதமர் மோடி, தற்போது கிழக்காசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் செய்துள்ளார். அதன் முதற்கட்டமாக அவர் இந்தோனேசியா சென்றார்.
இந்த நிலையில் தற்போது மோடி சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் சென்ற மோடி, இன்று காலை அந்நாட்டின் பிரதமர் லீ செய்ன் லாங்கை சந்தித்து உரையாடினார். அதன்பின் அந்நாட்டின் அதிபர் ஹலீமா யாக்குப்பை சந்தித்து உரையாடினார்.

மோடி தற்போது மூன்றாவது முறையாக சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த சந்திப்பு புவியியல் ரீதியாக பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் சிங்கப்பூர் செய்திகளில் எல்லாம் இந்த செய்தி தலைப்பு செய்தியாக வந்தது.
டுடே ''இருதரப்பு உறவுகளை பாராட்டிய பிரதமர் லீ மற்றும் பிரதமர் மோடி'' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதே பத்திரிக்கையின் இன்னொரு கட்டுரையில் '' சிங்கப்பூர் எப்போதும் ஊக்குவிக்கும் நகரமாக இருந்துள்ளது- மோடி'' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது.
ஸ்ட்ரைட் டைம்ஸ் ''சிங்கப்பூரும் இந்தியாவும் எதிர்காலத்தில் ஒன்றாக பயணிக்க வேண்டும் - மோடி'' என்று தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதே பத்திரிக்கையில் ''இருநாட்டு உறவுகளை பலப்படுத்த மூன்றாவது முறையாக சந்திப்பு நடத்தும் இந்தியா சிங்கப்பூர்'' என்றுள்ளது.
'' இந்த சந்திப்பிற்கு பின் 30க்கும் மேற்பட்ட பொருட்களின் விலையை இருநாடுகளும் குறைக்க உள்ளது'' என்று பிசினஸ் டைம்ஸ் தலைப்பு வெளியிட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications