கேரளாவில் 14 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக… நாளை வெளியாகிறது வேட்பாளர் பட்டியல்
கொச்சி:லோக்சபா தேர்தலில் கேரளாவில் கூட்டணிக் கட்சியான பாரத் தர்மஜன சேனாவுக்கு 5 தொகுதிகளையும், மாநில கட்சியான கேரள காங்கிரசுக்கு ஒரு தொகுதியையும் பாஜக ஒதுக்கி உள்ளது.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி வேலைகள் முடிந்து பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன. பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
நாடு முழுவதும் அந்தந்த மாநில கட்சிகளுடனும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை அமைத்து உள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தமிழகத்திலும் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

20 தொகுதிகளில் போட்டி
இந் நிலையில் கேரளாவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி பாஜக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் பாஜக 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

5 தொகுதிகள் ஒதுக்கீடு
எஞ்சிய 6 தொகுதிகளில் 5 தொகுதிகளை கூட்டணியில் உள்ள பாரத் தர்மஜன சேனாவுக்கு பாஜக ஒதுக்கி உள்ளது. ஒரு தொகுதியை அம்மாநில கட்சியான கேரள காங்கிரசுக்கு ஒதுக்கியிருக்கிறது. கேரள காங்கிரசுக்கு அம்மாநிலத்தில் 6 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

14ல் பாஜக
அதன்படி.. பாரத் தர்மஜன சேனாவுக்கு திருச்சூர், மாவேலிகரா, இடுக்கி, ஆலத்தூர் மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதி உள்ள 14 தொகுதிகளில் பாஜக களம் காண்கிறது.

வேட்பாளர்கள் பட்டியல்
அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்னும் பாஜக அறிவிக்கவில்லை. நாளையோ அல்லது ஒரு சில நாட்களிலோ அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா












Click it and Unblock the Notifications