For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நரேந்திர மோடி பிரதமராக உதவப் போகும் உத்தரப் பிரதேசம்: 53 இடங்கள் பாஜகவுக்கே- கருத்துக் கணிப்பு

By Chakra
|

டெல்லி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்க உத்தரப் பிரதேசம் தான் மிக முக்கியமான காரணமாக இருக்கப் போவதாக என்டிடிவி-ஹன்சா ரிசர்ச் அமைப்பு இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக மட்டும் 53 இடங்களில் வெல்லும். இது கடந்த தேர்தலை விட 43 இடங்கள் அதிகமாகும்.

சரிவை நோக்கி சமாஜ்வாடி, மாயாவதி:

சரிவை நோக்கி சமாஜ்வாடி, மாயாவதி:

ஆட்சியில் உள்ள சமாஜ்வாடிக் கட்சி 13 இடங்களில் மட்டுமே வெல்லும். இது கடந்த தேர்தலை விட 10 இடங்கள் குறைவு.

அதே போல மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்படும் என்றும் அந்தக் கட்சி வெறும் 7 இடங்களில் தான் வெல்லும் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. இது கடந்த தேர்தலை விட 13 இடங்கள் குறைவாகும்.

கடந்த முறை 26 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி இப்போது வெறும் 7 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

உ.பியில் கட்சிகள் பெறப் போகும் வாக்குகள்:

உ.பியில் கட்சிகள் பெறப் போகும் வாக்குகள்:

பாஜக: 38% (+21%)
சமாஜ்வாடிக் கட்சி: 21% (-2%)
பகுஜன் சமாஜ் கட்சி: 17% (-10%)
காங்கிரஸ்: 14% (-8%)

கேரளாவில்...

கேரளாவில்...

கேரளாவில் மொத்தமுள்ள 20 இடங்களில் இடதுசாரிக் கூட்டணி 11 இடங்களிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 9 இடங்களிலும் வெல்லுமாம்.

கடந்த தேர்தலில் இடதுசாரிகள் 4 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.

கட்சிகள் பெறப் போகும் வாக்குகள்:

இடதுசாரிகள்: 42% (+3%)
காங்கிரஸ் கூட்டணி: 45% (-3%)
பாஜக: 7% (0%)

ஹரியாணா:

ஹரியாணா:

ஹரியாணாவில் மொத்தமுள்ள 11 இடங்களில் பாஜக 5 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடத்திலும், ஓம் பிரகாஷ் செளதாலாவின் இந்திய தேசிய லோக்தள் 2 இடங்களிலும் வெல்லும் என்கிறது. கருத்துக் கணிப்பு. கடந்த தேர்தலில் இங்கு பாஜக 1 இடத்தில் தான் வென்றது. காங்கிரஸ் 9 இடங்களைப் பிடித்தது. லோக்தள் முட்டை வாங்கியது.

இந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 10 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் ஒரு இடத்திலும் வெல்லாது என்கிறது கருத்துக் கணிப்பு.

பஞ்சாப்:

பஞ்சாப்:

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 இடங்களில் காங்கிரஸ் 7 இடங்களிலும் பாஜக- சிரோமணி அகாலி தள் கட்சி கூட்டணி 6 இடங்களையும் பிடிக்கும். கடந்த முறை காங்கிரஸ் 8 இடங்களையும் பாஜக 5 இடங்களையும் பிடித்தன.

இந்த மாநிலத்திலும் ஆம் ஆத்மி கட்சி 11 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் ஒரு இடத்திலும் வெல்லாதாம்.

அஸ்ஸாம் காங்கிரசுக்கே..

அஸ்ஸாம் காங்கிரசுக்கே..

14 இடங்கள் கொண்ட அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியே 11 இடங்களைப் பிடிக்கும். இது கடந்த தேர்தலை விட 4 இடங்கள் அதிகம்.

கடந்த முறை 4 இடங்களில் வென்ற பாஜகவுக்கு இந்த முறை 3 இடங்கள் மட்டுமே கிடைக்கும். ஒரு இடத்தில் வென்ற பிரபல்லகுமார் மொகந்தாவின் அஸ்ஸாம் கண பரிஷத் கட்சிக்கு இந்த முறை கிடைக்க இருப்பது முட்டை என்கிறது கருத்துக் கணிப்பு.

ஒடிஸ்ஸாவை கையில் வைத்திருக்கும் நவீன்:

ஒடிஸ்ஸாவை கையில் வைத்திருக்கும் நவீன்:

பாஜக கூட்டணியில் இருந்து சமயம் பார்த்து விலகிய ஒடிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளமே இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் மொத்தமுள்ள 21 இடங்களில் 18 இடங்களைப் பிடிக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு. இது கடந்த தேர்தலை விட 4 இடங்கள் அதிகமாகும்.

அதே நேரத்தில் கடந்த தேர்தலில் 6 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சிக்கு இந்தமுறை 3 இடங்கள் மட்டுமே கிடைக்குமாம். 15 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் பாஜக ஒரு இடத்திலும் வெல்லாது என்கிறது என்கிறது கருத்துக் கணிப்பு.

மேற்கு வங்கம் மம்தாவுக்கே..

மேற்கு வங்கம் மம்தாவுக்கே..

42 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியே 28 இடங்களில் வெல்லுமாம். இது கடந்த தேர்தலை விட 9 இடங்கள் அதிகம்.

கடந்த தேர்தலில் 15 இடங்களில் மட்டுமே வென்ற இடதுசாரிகள் இந்தமுறை மேலும் சரிந்து 9 இடங்களில் மட்டுமே வெல்வார்கள் என்கிறது கருத்துக் கணிப்பு.

அதே போல 6 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை கிடைக்க இருப்து 5 இடங்கள் தானாம். 12 சதவீத வாக்குகளை வென்றாலும் பாஜகவுக்கு முட்டையே கிடைக்கும் என்கிறது என்டிடிவி.

English summary
NDTV's opinion polls shows a spectacular win for the BJP in Uttar Pradesh, the state where it has fielded its prime ministerial candidate, Narendra Modi. The BJP is expected to win 53 of the state's 80 seats, compared to just 10 in the 2009 election. Uttar Pradesh is India's most politically vital state and holds the key to power at the Centre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X