சமத்துவத்தில் நம்பிக்கையுள்ள என்னை ஆதரிக்க வேண்டும்.. மீரா குமார் உருக்கமான வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் மீரா குமார், தன்னை தெரிவு செய்த 17 கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது.

அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் தனது வேட்புமனுவை கடந்த 23ம் தேதி தாக்கல் செய்தார்.

போட்டி வேட்பாளர்

போட்டி வேட்பாளர்

பாஜக அறிவித்துள்ள வேட்பாளரை எதிர்த்து. முன்னாள் லோக் சபா நாயகர் மீரா குமார், எதிர்க்கட்சிகளால் களம் இறக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. வரும் 28ம் தேதி மீரா குமார் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

சோனியா தலைமையில் தேர்வு

சோனியா தலைமையில் தேர்வு

இந்நிலையில், இன்று டெல்லியில் மீரா குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி வேட்பாளராக தன்னை ஒருமனதாக தேர்வு செய்த 17 கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். குறிப்பாக சோனியாக காந்தி தலைமையில் ஒருங்கிணைந்து தான் தேர்வு செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

அனைத்துக் கட்சி ஆதரவு

அனைத்துக் கட்சி ஆதரவு

17 கட்சிகள் ஒருமனதாக தன்னை தேர்வு செய்துள்ளதால் அனைத்துக் கட்சிகளும் தன்னை ஆதரிக்க வேண்டும் என்று மீராகுமார் கேட்டுக் கொண்டார். மேலும், சமத்துவம், சமூக நீதியில் தனக்கு மிக அதிகமான நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மனசாட்சிப்படி..

மனசாட்சிப்படி..

குறுகிய அரசியல் அரசியல் ஆதாயத்திற்காக ஜனாதிபதி அலுவலகம் செயல்பட முடியாது. ஜனாதிபதி தேர்தலில் எம்பி, எம்எல்ஏக்கள் தங்கள் மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டும் என்று மீரா குமார் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former speaker Meira Kumar has thanked 17 parties, which selected her as a presidential candidate.
Please Wait while comments are loading...