தேசிய புலனாய்வு ஏஜென்சியின் தலைவர் சரத்குமாரின் பதவிக்காலம் நீட்டிப்பு
டெல்லி: தேசிய புலனாய்வு ஏஜென்சியின் தலைவர் சரத்குமாரின் பதவிக்காலம் ஒப்பந்த அடிப்படையில் மேலும் ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சரத்குமார். அவர் கடந்த 2013ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி தேசிய புலனாய்வு ஏஜென்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரின் பதவிக்காலம் சனிக்கிழமையுடன் நிறைவடையவிருந்தது. இந்நிலையில் அவரின் பதவிக்காலத்தை ஒப்பந்த அடிப்படையில் மேலும் ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மாலேகாவ்ன், சம்ஜாவ்தா குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை ஏற்கனவே தாமதமாகியுள்ள நிலையில் குமார் ஓய்வு பெற்றால் மேலும் சிக்கல் ஆகிவிடும் என்பதால் அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் தான் மாலேகாவ்ன், சம்ஜாவ்தா வழக்குகளை கவனித்து வருவதால் அவர் அந்த பதவியில் தொடர்ந்து நீட்டிப்பது நல்லது என்று கருதப்படுகிறது.
அவருக்கு தான் அந்த வழக்குகளின் விபரங்கள் அனைத்தும் நன்கு தெரியும் என்பதால் அவர் தலைமையில் விசாரணை நடத்தினால் அது தாமதமாகாது என்று நம்பப்படுகிறது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தேசிய புலனாய்வு ஏஜென்சியின் தலைமை இயக்குனர் சரத்குமார், மறு பணியமர்த்தல் ஒப்பந்த அடிப்படையில் மேலும் ஓராண்டுக்கு தனது பதவியில் நியமிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications