காதலுக்கு கண்ணில்லை.. படிப்புக்கு வயதில்லை: தாய், தந்தை, மகன் சேர்ந்து எழுதிய பிளஸ் 2 தேர்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் பிளஸ் 2 தேர்வுகளில் தனது மகனுடன் தாயும், தந்தையும் தேர்வு எழுதுவதை கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

நடியா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி. அவரது மனைவி இல்லத்தரசி. இவர்களுக்கு பீலாப் என்ற மகன் உள்ளார். அவர் ரனாகாட்டில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

No age bar for education: Mother, father appear for class XII alongside son in Bengal

தற்போது பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தன் மகன் பிலாப்புடன் பிளஸ் 2 படிக்கும் தாய், தந்தை ஆகியோரும் தேர்வு எழுதினர். குடிசை வீட்டில் வாழும் அவர்களுக்கு படிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் கடந்த 2014 மற்றும் 2015-இல் இடைநிலைக் கல்வியை முடித்தனர்.

இந்நிலையில், பிளஸ் 2 படிக்க விரும்பிய அவர்களை அவர்களது வயதை காரணம் காட்டி அனுமதி அளிக்க மறுத்துவிட்டன. இறுதியாக படிப்பின் மீது இருவருக்கும் உள்ள தாக்கம் காரணமாக பிலாப்பின் பள்ளித் தலைமை ஆசிரியர் இருவரையும் பள்ளியில் சேர்த்துக் கொண்டார்.

கடந்த 3 ஆண்டுகளாக தேர்வுக்காக இருவரும் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை பிலாப் தீர்த்து வைப்பார். அனைத்து தடைகளையும் தகர்ந்து படிப்பின் மீதான ஆர்வத்தால் கடினமாக உழைக்கும் பிலாப்பின் பெற்றோர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In what may be a first, Biplab Mondal who is a student of Class XII, at Arongghata Hajrapur School in West Bengal's Ranaghat, appeared for the higher secondary examination with his parents.
Please Wait while comments are loading...