For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலையில் ஹெல்மெட் இருந்தால்தான் வண்டிக்கு பெட்ரோல்... உ.பி. மாநிலத்தில் அதிரடி

மோட்டார் சைக்கிள் ஓட்டும் நபர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து இருந்தால்தான், வண்டிக்கு பெட்ரோல் வழங்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

By Devarajan
Google Oneindia Tamil News

லக்னோ : உ.பி. தலைநகர் லக்னோவில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு நாளை முதல் பங்குகளில் பெட்ரோல் விற்பனை செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு கடந்த வாரம் இந்த உத்தரவை வெளியிட்டிருந்தது.

No Helmet, No Fuel In Lucknow, U.P. Govt taken steps

இதை நடைமுறைப்படுத்தும் விதமாக லக்னோ போலீசார் பெட்ரோல் நிலையங்களுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களுக்கு கடந்த 3 நாட்களாக சிறப்புப் பயிற்சி அளித்து வந்தனர். இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே போல கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 நகரங்களில் வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல், ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

English summary
The Lucknow police has taken a unique step to not allow anyone one to refill their vehicles if caught without the protective head gear.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X