For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் ஜிக்கா வைரஸ் பாதிப்பு இல்லை... பீதி வேண்டாம்: ஜே.பி.நட்டா

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் ஜிக்கா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும் மக்கள் இது குறித்து பீதியடைய தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட 23 நாடுகளில் ஜிக்கா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் கருவில் உள்ள குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு அவர்கள் சிறிய தலையுடன் பிறக்கிறார்கள். ஜிக்கா வைரஸ் டெங்கு, சிக்குன்குனியா நோய்களை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது.

No need to panic of Zika virus: J.P.Nadda

ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் கண்கள் சிவப்பாகுதல், காய்ச்சல், அரிப்பு, தசை மற்றும் மூட்டு வலி, ஆகியவை ஏற்படும். அந்த அறிகுறிகள் 2 முதல் 7 நாட்களில் சரியாகிவிடும். ஜிக்கா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை

இதுதொடர்பாக அமைச்சர் நட்டா கூறியதாவது, இந்தியாவில் இதுவரை ஜிக்கா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. எனவே மக்கள் பீதியடைய தேவையில்லை. ஜிக்கா வைரஸ் பரவல் மற்றும் தடுப்பு முறைகள் கொண்ட விளக்கவுரை, மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. கருவுற்றிருக்கும்
தென் அமெரிக்க நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஜிக்கா வைரஸ் தாக்குதலை சமாளிக்க மத்திய அரசு முழு வீ்ச்சில் செயல்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். பிரேசிலில் மட்டும் 4000 குழந்தைகளுக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Union Minister of Health and Family Welfare of India Jagat Prakash Nadda says, No need to panic of Zika virus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X