For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'மால்களுக்கு' இரவு 10 மணிக்கு மேல் கரண்ட் கிடையாது.. டெல்லி கவர்னர்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் இரவு 10 மணிக்கு மேல் ஷாப்பிங் மால்களுக்கு மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்று துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் கூறியுள்ளார்.

டெல்லியில் தற்போது மின் பற்றாக்குறை தலைவிரித்தாட ஆரம்பித்துள்ளது. இதையடுத்து மின் நெருக்கடியைக் குறைக்க அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார் ஆளுநர் ஜங்.

No Power for Malls After 10 PM: Delhi Lieutenant Governor

கூட்டத்தின்போது அவர் பல கட்டுப்பாடுகளையும் அதிகாரிகளுக்கு பிறப்பித்தார். அன்படி ஷாப்பிங் மால்களுக்கு இரவு 10 மணி வரை மட்டுமே மின்விநியோகம் செய்யப்பட வேண்டும்.

டெல்லி தலைமைச் செயலகம், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை அனைத்து ஏசி மெஷின்களையும் ஆப் செய்து விட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், மின்துறை முதன்மைச் செயலாளர், டெல்லி டிரான்ஸ்கோ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டெல்லியில் தற்போது கோடைகாலம் உச்சத்தில் உள்ளது. கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து கடும் மின் தடையும் ஏற்பட்டு வருகிறது.

English summary
Delhi Lieutenant Governor Najeeb Jung today held a meeting to review the power situation in the national capital and ordered some strict measures to meet the growing demand during the peak summer season. After the meeting, Mr Jung ordered that the power supply to shopping malls in Delhi will not be made available after 10 pm. He has also ordered all government offices, including Delhi Secretariat, and universities and colleges to switch off the air conditioners between 3:30 and 4:30 pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X