கொளுத்தும் வெயில்.. கார் பேனட்டில் சப்பாத்தி சுட்ட பெண்.. வைரலாகும் ‘ஹாட்’ வீடியோ!
பெண் ஒருவர் கார் பேனட்டில் சாப்பாத்தி போடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
புபனேஷ்வர்: வெயிலின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதைக் காட்டும் வகையில் ஒடிசாவில் பெண் ஒருவர் கார் பேனட்டில் சப்பாத்தி சுடும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவின் பெரும் பகுதியை தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அடுத்த மாதம் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க உள்ள நிலையில் இப்போதே பல இடங்களில்வெப்பம் 40 டிகிரியைத் தாண்டி கொளுத்தி வருகிறது. குறிப்பாக ஓடிசா மாநிலத்தில் கடந்த 25ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை 9 மாவட்டங்களில் அதிக வெப்பத்திற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரின் பேனட்டில் சப்பாத்தி சுட்டு, ஒடிசாவில் வெப்பநிலை எப்படி தகிக்கிறது என்பதைக் காட்டியுள்ளார் பெண் ஒருவர்.

அடுப்பாக மாறிய கார்
ஒடிசாவின் சோனேப்பூர் மாவட்டத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார் ஒன்றின் பேனட்டில் பெண் ஒருவர் சப்பாத்தி தேய்த்து, அதனை சுட்டு எடுக்கிறார். வெளியில் வெயிலில் நிறுத்தப்பட்டிருந்ததால், அடுப்பைப் போல தகித்துக் கொண்டிருக்கிறது அந்தக் கார் பேனட். எனவே சப்பாத்தி அழகாக அடுப்பில் சுடுவது போல் பதமாக இருக்கிறது.

வைரல் வீடியோ
பொதுவாகவே கோடை காலத்தில் வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களைத் தொடக்கூட முடியாது. அவ்வளவு சூடாக இருக்கும். இப்போது அடிக்கும் வெயிலுக்கு அடுப்பைப் போல வாகனங்கள் சூடாக மாறி விடுகின்றன என்பது இந்த வீடியோவைப் பார்க்கும்போது தெரிகிறது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சோலார் எனர்ஜி
இந்த வீடியோவைப் பார்த்து ஒருபுறம் நெட்டிசன்கள் அதிர்ச்சியாக, மறுபுறம் சோலார் சக்தி தான் நம் எதிர்காலம் என இதிலும் பாசிடிவ்வான கருத்துக்களை எடுத்து சிலர் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே ஒடிசாவில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் கடந்த 25ம்தேதி முதல் பள்ளிகளுக்கு தற்காலிக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்விளைவு அதிகம்
இந்த வீடியோ மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியப் பாடம், இருசக்கர வாகன ஓட்டிகளாகட்டும், பின்னால் அமர்ந்து செல்பவர்களாகட்டும்.. வெயிலில் வாகனத்தை நிறுத்தி இருந்தால், அதனை கொஞ்சம் குளிர்வித்துவிட்டு பிறகு ஏறி அமருங்கள். இல்லாவிட்டால் 'பின் விளைவுகள்' பயங்கரமாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள் மக்களே.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications