நீ அடிச்சா நான் அடிப்பேன்... மாறி மாறி அடித்துக் கொண்ட கரண் குந்த்ராவும், சான்வி தல்வாரும்!
மும்பை: காதலர்களுக்குள் சண்டை நடப்பது சகஜம்தான். ஆனால் அடிதடி என்று உடல் ரீதியாக போகும்போதுதான் சற்று சிக்கலாகி விடுகிறது. இப்படித்தான் ஒரு நடிப்பு ஜோடியும் அடித்துக் கொண்ட கதை மும்பையில் அரங்கேறியுள்ளது.
அவர்கள் கரண் குந்த்ரா மற்றும் சான்வி தல்வார். யே கஹான் ஆ காயே ஹம் என்ற டிவி சீரியலின் ஹீரோ, ஹீரோயின்தான் இவர்கள்.
ஒரு ராக்ஸ்டாருக்கும், கர்நாடக பாடகிக்கும் இடையிலான காதல்தான் இந்த சீரியலின் கதையாகும். சீரியலில் உருகி உருகி காதலிக்கும் இவர்கள் நிஜத்தில் அடித்துக் கொண்டுள்ளனர் சமீபத்தில். அதுவும் செட்டில் வைத்தே.

முத்தக்காட்சி...
சீரியலில் வரும் ஒரு முக்கியக் காட்சிக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதில் கரண், சால்விக்கு முத்தமிட வேண்டும். பதிலுக்கு சான்வி, குந்த்ராவை பளார் என அறைய வேண்டும். இதுதான் காட்சி.

பளார்...
ஆனால் இயக்குநர் சொல்வதற்கு முன்பே வேகமாக முத்தமிட்டு விட்டார் குந்த்ரா. இதனால் கோபமாகிப் போன சான்வி பளார் என ஓங்கி குந்த்ராவை அறைந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்தார் குந்த்ரா. காட்சி அத்தோடு நிறுத்தப்பட்டது.

பதிலுக்கு பதில்...
இதனால் சான்வி தனது இருக்கையை நோக்கி நகர்ந்தார். அப்போது வேகமாக அவரை நெருங்கிய குந்த்ரா, சான்வியின் கன்னத்தில் பளார் என ஓங்கி அறைந்தார். கோபமாக திட்டவும் செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் படக் குழுவினர் அவர்களை விலக்கி விட்டனராம்.

அதிர்ச்சி...
இதுகுறித்து சான்வி கூறுகையில், ‘இந்த சம்பவம் என்னை அதிர்ச்சி அடைய வைத்து விட்டது. எந்தப் பெண்மணுக்கும் இப்டி ஒரு சித்திரவதை வந்திருக்காது. இது என்னை துயர்படுத்தி விட்டது. யாருமே குந்த்ராவை தடுத்து நிறுத்த முயலவில்லை.

நடவடிக்கை...
ரொம்ப நேரம் கழித்துத்தான் அனைவரும் சமாதானம் செய்ய வந்தனர். இந்த நிலை எந்தப் பெண்ணுக்கும் வரக் கூடாது. இந்த சம்பவம் தொடர்பாக டிவி தயாரிப்பு நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன். மீண்டும் இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

தொடர்ந்து நடிப்பேன்..
இந்த சம்பவத்திற்காக இந்த சீரியலை நிறுத்த நான் விரும்பவில்லை. இதை பலரும் விரும்பிப் பார்க்கிறார்கள். தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கும். நானும் தொடர்ந்த நடிப்பேன்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு வேளை சீரியல் ஜவ்வாக இழுக்கிறதோ...?


Click it and Unblock the Notifications
