For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது மாடியிலிருந்து விழுந்து காயமடைந்தவர் மரணம்

By Arivalagan
Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூரு போலீஸ் துப்பாக்கிச் சூட்டின் போது காயமடைந்த மேலும் ஒருவர் இறந்துள்ளார். ஆனால் இவர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகவில்லை என்றும் தவறி விழுந்து இறந்ததாகவும் கூறப்படுகிறது.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படாதால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்று கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான போராட்டம் தலை தூக்கியது. தமிழர்கள் கடைகள், வீடுகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீ வைத்து கொளுத்தப்பட்டன.

protest

கர்நாடகாவில், காவிரி நீர் விவகாரம் தொடர்பான வன்முறை உச்சக்கட்டத்தை எட்டியது. இந்த நிலையில் பெங்களூர் - மைசூர் நைஸ் சாலையில் டிசோசா லேஅவுட் பகுதியில் பிஎஸ்ஐடி கல்லூரி அருகே லாரி நிறுத்தமிடத்தில் 27 லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 27 லாரிகளும் சரக்குகளுடன் எரிந்து நாசமாகின. அதேபோல அந்த இடத்தில் உள்ள கொடவுனில் நிறுத்தப்பட்டிருந்த கே.பி.என் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான சொந்தமான 52 சொகுசு பேருந்துக்கள் பேருந்துகள் எரிக்கப்பட்டன.

இந்த நிலையில் ஹெக்கனஹள்ளி, ராஜகோபாலநகர் ஆகிய இடங்களில் போலீசார் வாகனத்தை எரிக்க வன்முறையாளர்கள் முயற்சித்தனர். இதனால் போலீஸார் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதில் நேற்று உமேஷ் என்பவர் பலியானார்.

இந்த நிலையில் அந்த சம்பவத்தின்போது காயமடைந்த குமார் என்பவர் இன்று இறந்தார். ஆனால் உண்மையில் இவர் போலீஸ் தடிடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்த போதுவேகமாக ஓடி 3வது மாடியிலிருந்து கீழே விழந்து காயமடைந்தவராம். எனவே இவரது மரணத்தை துப்பாக்கிச் சூடு மரணத்துடன் சேர்க்க கர்நாடக அரசு மறுத்து வருகிறதாம்.

English summary
One more person named Kumar has been died in Hegganahalli police firing in Bangaluru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X