பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷன்ஜாதவ் விடுதலையாவதில் புதிய சிக்கல்-இந்தியாவுக்குப் பின்னடைவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: குல்பூஷன் யாதவ் விவகாரத்தில், இந்தியா பதில் அளிக்க, பன்னாட்டு நீதிமன்றம் போதிய அவகாசம் வழங்காததால் பாகிஸ்தான் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷன் யாதவ், ஈரானுக்கு தொழில் பயணமாகச் சென்றபோது, அவரை உளவாளி எனக் கூறி, பாகிஸ்தான் உளவு அமைப்பினர் கைது செய்தனர். பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, குல்பூஷனுக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவரை நேரில் சந்தித்துப் பேச இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தான் உளவாளிகளை விடுதலை செய்தால்தான், குல்பூஷனை சந்திக்க, இந்திய வெளியுறவு அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என அந்நாடு கூறியது.

விசாரணை

விசாரணை

இதை எதிர்த்து, பன்னாட்டு நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இதில், நீதிமன்ற விசாரணை முடிவடையாமல், குல்பூஷன் யாதவுக்கு, மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கும்படி, உத்தரவிடப்பட்டது.

கால அவகாசம்

கால அவகாசம்

மேலும், இந்தியாவின் வாதங்களை பதிவு செய்ய 6 மாதம் அவகாசம் கோரப்பட்டது. அதனை நிராகரித்த பன்னாட்டு நீதிமன்றம், செப்டம்பர் 13ம் தேதிக்குள் இந்தியா, தனது விளக்கத்தை பதிவு செய்யும்படி கூறியுள்ளது. பாகிஸ்தானுக்கு, டிசம்பர் 13ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

நெருக்கடி

நெருக்கடி


இது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் மகிழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்னடைவு

பின்னடைவு

இந்தியாவுக்கு சிறு தோல்வி கிடைத்தாலும் போதும் என்கிற நிலைப்பாட்டில் பாகிஸ்தான் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் என்ன இறுதி தீர்ப்பு கிடைக்கப் போகிறது என குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Paksitan has claimed that India received a setback from the International Court of Justice in the case of Kulbhushan Jadhav.
Please Wait while comments are loading...