பாஜக கூட்டணியில் சேர மாட்டோம்: சரத்பவார் திட்டவட்டம்
டெல்லி: பாரதீய ஜனதா தலமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கண்டிப்பாக கூட்டணி வைக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் சரத்பவார்.

இது தொடர்பாக சரத்பவார் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய போவது இல்லை. இந்த கேள்வி எழவே கூடாது. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தே வரும் தேர்தலை தேசியவாத காங்கிரஸ் சந்திக்கும். மத்தியில் அடுத்த அரசு அமைக்கும் அளவு தேவையான எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெறாது. நான் ஜோதிடர் கிடையாது. ஆனால் உறுதியாக கூறுகிறேன். பாரதீய ஜனதா அந்த எண்ணிக்கையை பெறாது' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்து அக்கட்சி பிரசாரம் மேற்கொண்டு வருவது குறித்தான கேள்விக்கு, ‘கடந்த 2004 ஆம் ஆண்டு என்ன நடந்தது. பாரதீய ஜனதா 2004 ல் தோல்வி அடைந்தது. இந்தியா ஒளிர்கிறது என்று வாஜ்பாய் பிரச்சாரம் செய்த போதிலும் தோல்வியே அடைந்தது' எனப் பதிலளித்துள்ளார்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications