பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்வு.. டீசல் விலை 12 காசுகள் குறைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், டீசல் விலை லிட்டருக்கு 12 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

சர்வதேச கச்சா எண்ணை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, எண்ணை நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்துகொள்ள இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவ்வப்போது விலை நிலவரத்தை மாற்றியமைக்கின்றன எண்ணை நிறுவனங்கள்.

Petrol price up by Rs 0.13, diesel down by 0.12

கச்சா எண்ணை விலையேற்றம் காரணமாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக இன்று மாலை அறிவிப்பு வெளியானது. டீசல் விலை லிட்டருக்கு 12 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. இன்று நள்ளிரவு முதல் புதிய விலை அமலுக்கு வரும்.

பெட்ரோல் விலை கடந்த செப்டம்பர் முதல் இதுவரை 7 முறை உயர்த்தப்பட்டுள்ளது. நவம்பர் 15ம்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.46, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.53 குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The prices of petrol have increased by Rs 0.13 per litre while diesel prices have decreased by 0.12 per litre. The new prices will come into effect from the midnight of November 30. This is the 7th increase in rates since September.
Please Wait while comments are loading...