பிரபல ஷோரூமில் பெண்கள் உடைமாற்றுவதை செல்போனில் வீடியோ எடுத்த மேனேஜர்
டெல்லி: டெல்லியில் உள்ள வான்ஹ்யூசன் ஷோரூமில் இருக்கும் உடைமாற்றும் அறையில் பெண்களை வீடியோ எடுத்த மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்கிழக்கு டெல்லியில் உள்ள லாஜ்பத் நகரில் வான்ஹ்யூசன் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. அந்த ஷோரூமிற்கு எம்.என்.சி.யில் பணிபுரியும் 23 வயது பெண் திங்கட்கிழமை சென்றுள்ளார். அங்கு அவர் உடைமாற்றும் அறைக்கு சென்று தான் வாங்கிய ஆடையை போட்டு பார்க்க முயன்றார்.
ஆடையை மாற்றும் முன்பு அவர் அந்த அறையில் கேமரா ஏதாவது உள்ளதா என்று சோதித்துள்ளார். அப்போது அறையின் ஒரு பகுதியில் செல்போன் ஒன்று இருந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது அதில் வீடியோ ஆன் ஆகி அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருந்ததை பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையின் மேனேஜர் புல்கித் சன்வாலை கைது செய்தனர். மேலும் உடை மாற்றும் அறையில் இருந்த செல்போனை பறிமுதல் செய்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான சன்வால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் வான்ஹ்யூசன் ஷோரூமில் மேனேஜராக சேர்ந்துள்ளார். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் அந்த வீடியோக்களை தான் மட்டும் பார்த்தாரா இல்லை இணையதளங்களுக்கு அளித்தாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications