For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாக்டரை கேட்காமல் கொரோனாவுக்கு இந்த மருந்தை எடுத்தால் உயிருக்கு ஆபத்து : மருத்துவர் எட்செல் வார்னிங்

Google Oneindia Tamil News

மணிலா: மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்தி கோவிட் 19க்கு முற்றுப்புள்ளிவைக்க உலக நாடுகளில் சோதனை முயற்சிகள் நடந்து வருகிறது.

ஆனால் COVID19 க்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (பிளாக்வெனில்) மற்றும் அஜித்ரோமைசின் ஆகியவற்றை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்கர் எட்செல் சல்வானா தெரிவித்துள்ளார்.

Please dont take hydroxychloroquine (Plaquenil) plus Azithromycin for COVID19 : Dr. Edsel Salvana

இது தொடர்பாக அவர் கூறுகையில். "ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (பிளாக்வெனில்) மற்றும் அஜித்ரோமைசின் ஆகிய இரண்டு மருந்துகளும் உங்கள் இதயத்தின் QT இடைவெளியை பாதிக்கின்றன அத்துடன் அரித்மியா ஏற்படுத்தும் அல்லது திடீர் மரணத்திற்கு வழிவகுக்கும், குறிப்பாக உங்களுக்கு இதய பாதிப்பு இருத்தாலோ அல்லது மற்ற நோய்களுக்கு மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்தாலோ பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்த மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்காமல் உட்கொள்ள வேண்டாம்.

கொரானா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். நீங்கள் அவற்றை "பதுக்கி வைக்க" தொடங்கினால், இப்போது அவர்களுக்குத் தேவைப்படுபவர்களுக்கு எதுவும் மிச்சமில்லை. தயவுசெய்து பொறுப்புடன் செயல்படுங்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் போதும். கொரோனாவை தடுக்கலாம்.

தற்போது சில விஷயங்கள் மக்களின் கவனத்தை திசை திருப்பி விடுகிறது. மருத்துவர்களே சரிபார்க்கப்படாத மற்றும் மதிப்பாய்வு செய்யப்படாத தகவல்களை பகிர்வதை நிறுத்துங்கள். நீங்கள் நிறைய உயிர்களைக் காப்பாற்றுவீர்கள் என்று கூறியுள்ளார்.

English summary
Please don't take hydroxychloroquine (Plaquenil) plus Azithromycin for COVID19 UNLESS your doctor prescribes it. : Dr. Edsel Salvana
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X