சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் புகார் விவகாரத்தில் விலகி நிற்க மத்திய அரசு முடிவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் சரி இல்லை... உச்சநீதிமன்ற நீதிபதிகள்- வீடியோ

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக சக நீதிபதிகள் போர்கொடி தூக்கியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் தள்ளியே நிற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர்.

PM discusses with Law minister on Judges's allegation

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் குற்றம்சாட்டியிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பிரதமர் மோடி சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை உடனடியாக போனில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது நீதித்துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் புகார் விவகாரத்தில் விலகி நிற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நீதிமன்றமே இப்பிரச்சனையை சரி செய்து கொள்ள வழிவிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன், பிரதமர் மோடி நடத்திய ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PM Modi discussed with Union Law minister Ravi Shankar Prasad after four senior SC judges slammed so many charges on CJI and the Judicial administration of the Top court. The central govt has decided to do not interfere in the supreme court issue.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற